இந்த வார ராசி பலன் | Weekly Rasi Palan in Tamil |30.03.2025 -05.04.2025

rasi palan today

By ASTRO SIVA

Published on:

Facebook Page Join WhatsApp Channel
இந்த வார ராசி பலன்

இந்த வார ராசி பலன் | Vara Rasi Palan

மேஷம்

இந்த வார ராசி பலன் | Weekly Rasi Palan in Tamil

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 6-ல் கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருந்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும்.

மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன், சனி, ராகு சேர்க்கைப்பெற்று விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற வகையில் வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது.

வயது மூத்தவர்களிடம் தேவையற்ற வகையில் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரன்மென்தால் சூழ்நிலையை புரிந்துகொண்டு எதிலும் சற்று பொறுமையோடு நடப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளித்து எடுத்த பணியை குறித்த நேரத்தில் சிறப்பாக செய்துமுடிப்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் பணி தொடர்பாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய ஒரு நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும்.

அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

ரிஷபம்

இந்த வார ராசி பலன் | Weekly Rasi Palan in Tamil

உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- சனி, ராகு, சூரியன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சாரம் செய்வது மிகவும் அற்புகுமான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும் கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து மகிழ்ச்சி ஏற்படக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும்.

தற்போது உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கக்கூடிய செவ்வாய் வருகின்ற 3-ஆம் தேதிமுதல் 3-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்கள் குடும்பத்தில் நிலவிய தேவையற்ற கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது மறைந்து குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கெளரவமான நிலையினை எட்டக்கூடிய யோகமானது உங்களுக்கு உண்டு.

அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது ஒரு விடிவு காலம் கிடைத்து ஒரு கௌரவமான நிலையினை எட்டுவீர்கள்.

மாணவ- மாணவியர்கள் உங்களுக்கு இருந்த தேக்க நிலை தற்போது விலகி படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர், ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வதன்மூலமாகவும் விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பது மூலமாகவும் வளமான பலன்களை அடையலாம்.

மிதுனம்

இந்த வார ராசி பலன் | Weekly Rasi Palan in Tamil

ஜென்ம ராசியில் செவ்வாய், விரைய ஸ்தானமான 12-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது.

பணவரவு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். ராசியாதிபதி புதன்- சுக்கிரன் சூரியன் சேர்க்கைப்பெற்று ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.

வேலையாட்கள் ஒத்துழைப்பு சாதகமாக இருந்தாலும் ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைப்படக்கூடிய நேரமாகும். முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் இருக்கும் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும்.

மாணவ- மாணவியர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுவது நல்லது.

கடகம்

இந்த வார ராசி பலன் | Weekly Rasi Palan in Tamil

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ல் சனி, புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதாலும் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த உடல் உபாதைகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள்.

பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். கணவன். மனைவியிடையே ஒற்றுமை மிகவும் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துவகையில் நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைக்கு எல்லாம் தற்போது ஒரு முடிவு கிடைத்து உங்களுக்கு ஒரு சாதகமான நிகழ்வு நடக்கும்.

தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். கூட்டாளிகள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் வெற்றி தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் நீங்கள் விரும்பிய இடம் மாற்றத்தை பெறக்கூடிய நேரமாகும். சக ஊழியர்களால் இருந்துவந்த இடையூறுகள் எல்லாம் தற்போது குறையும்.

மாணவ- மாணவியர்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய காலமாகும்.

வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

சிம்மம்

இந்த வார ராசி பலன் | Weekly Rasi Palan in Tamil

உங்கள் ராசியாதிபதி சூரியன்- சனி, ராகு சேர்க்கைப்பெற்று அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும்.

உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்பு ஏற்பட்டு தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். சக்திக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று சிக்கனத்தோடு இருக்கவேண்டும். நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள் என்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

வண்டி, வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்றபொழுது சற்று பொறுமையோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தள்ளிவைப்பது உத்தமம்.

உங்களுக்கு சட்டரீதியாக சில சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எவ்வளவுதான் சிறப்பாக செயல்பட்டாலும் உங்கள் மீது தேவையற்ற பழி சொற்கள் வர வாய்ப்பு இருப்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று கவனத்தோடு செயல்படவேண்டும்.

மாணவ- மாணவியர்களுக்கு ஞாபக மறதி ஏற்படக்கூடிய நேரமென்பதால் படிப்பில் கவனத்தோடு இருக்கவேண்டும்.

வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற துர்க்கையம்மன் வழிபாடு செய்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நல்லது.

கன்னி

இந்த வார ராசி பலன் | Weekly Rasi Palan in Tamil

உங்கள் ராசியாதிபதி புதன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 7-ல் சஞ்சரிப்பதாலும், 9-ல் குரு சஞ்சரிப்பதாலும் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 10, 11-ல் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் சனி, ராகு சஞ்சரிப்பதால் கணவன் -மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. ஒவ்வொரு விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு வாடிக்கையாளர்களுடைய எண்ணத்தை பூர்த்தி செய்யக்கூடியப் பலம் உங்களுக்கு இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்க முடியாத பணியைக்கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய நாளாக இன்றைய நாள் இருக்கும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் மேற்படிப்புக்காக மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி தரும்.

வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, கால பைரவரை தரிசிப்பதன் மூலம் அனுகூலங்கள் ஏற்படும்.

துலாம்

இந்த வார ராசி பலன் | Weekly Rasi Palan in Tamil

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனி, ராகு, சூரியன் சஞ்சரிப்பது மிகவும் உன்ன தமான அமைப்பென்பதால் எந்த ஒரு விஷயத்திலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது விலகி ஏற்ற மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்தி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் தொடர்பாக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

வெளியூர், வெளிநாடுகள்மூலமாக நல்லசெய்தி உங்களுக்கு வரக்கூடிய நேரமாகும். உங்கள் ராசிக்கு வருகின்ற 3-ஆம் தேதிமுதல் செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் இருக்கக்கூடிய இடத்தில் ஒரு கௌரவமான வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய காலமாகும். புதிதாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பெரிய இடத்து நட்பு கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும்.

மாணவ-மாணவியர்கள் கடந்தகாலங்களில் உங்களுக்கு இருந்த தேக்க நிலை தற்போது விலகி படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கமுடியும்.

வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, அஷ்டலட்சுமிக்கு தீபம் ஏற்றுவதன்மூலம் ஏற்றங்கள் ஏற்படும்.

விருச்சிகம்

இந்த வார ராசி பலன் | Weekly Rasi Palan in Tamil

உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 4-ல் சூரியன், சனி, ராகு, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வண்டி, வாகனங்கள் மூலமாககூட வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்லவேண்டும்.

உடல்நலத்தில் கவனம் செலுத்துவது. உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வேலையாட்களுடைய ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஒருசிலருக்கு கூட்டாளிகள் மூலமாக தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும்.

அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக ஓய்வு நேரம் குறையக்கூடிய காலமாகும். சக ஊழியர்களுடைய வேலையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய காலமாகும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவேண்டும்.

மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடிய நண்பர்களால் உங்களுக்கு வீண் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் தேவையற்ற நட்புகளை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

வரும் நாட்களில் நற்பலன்களை அடைய முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நன்று.

தனுசு

இந்த வார ராசி பலன் | Weekly Rasi Palan in Tamil

உங்கள் ராசியாதிபதி சனி 3-ல் சூரியன், ராகு சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதும், 5-ல் குரு சஞ்சரிப்பதும் மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு மறுமலர்ச்சி இனிவரும் நாட்களில் ஏற்படும்.

குடும்பத்தில் நிலவிய தேவையில்லாத நெருக்கடிகள் எல்லாம் வரும் நாட்களில் குறைந்து மன நிம்மதி உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் கடந்தகால தேக்கங்கள் எல்லாம் தற்போது விலகி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட தற்போது உங்களின் நல்ல பண்பைப் புரிந்துகொண்டு உங்களுடன் நட்புடன் பழகக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய அமைப்பு, கடந்தகால அவப்பெயர்கள் விலகி மனநிம்மதி ஏற்படக்கூடிய யோகம் வரும் நாட்களில் உண்டு.

மாணவ – மாணவியர்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவது மட்டுமில்லாமல் நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய காலமாகும்.

உங்கள் வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்பட காலபைரவரை வழிபாடு செய்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வதன்மூலமாக ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும்.

மகரம்

இந்த வார ராசி பலன் | Weekly Rasi Palan in Tamil

உங்கள் ராசிக்கு 2ல் சனி, ராகு, சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு எதிலும் பொறுமையோடு இருந்தால்தான் தேவையற்ற நெருக்கடிகளை தவிர்க்க முடியும். குடும்பத்தில் கணவன்-மனைவிக்கிடையே வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலமாகும்.

உங்கள் ராசிக்கு 2ல் புதன், சுக்கிரன் வரும் 3ம் தேதி முதல் 6ம் வீட்டில் செவ்வாய் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் ஒரு சில எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன் மூலம் இருக்கக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் மற்றவர்களுடைய உதவியை எதிர்பார்க்காமல் எந்த ஒரு விஷயத்திலும் நீங்கள் நேரடியாக தலையிட்டு செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.

தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சின்ன சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் உங்கள் தனி திறமையால் எதையும் சமாளிக்க கூடிய பலம் உண்டாகும்.

மாணவ மாணவியர்களுக்கு ஞாபக மறதி ஏற்படலாம் என்பதால் படிப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

வரும் நாட்களில் வளமான பலன்களை பெற துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் அர்ச்சனை செய்வது தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

கும்பம்

இந்த வார ராசி பலன் | Weekly Rasi Palan in Tamil

உங்கள் ராசிக்கு 2ல் சனி, ராகு, சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு எதிலும் பொறுமையோடு இருந்தால்தான் தேவையற்ற நெருக்கடிகளை தவிர்க்க முடியும். குடும்பத்தில் கணவன்-மனைவிக்கிடையே வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலமாகும்.

உங்கள் ராசிக்கு 2ல் புதன், சுக்கிரன் வரும் 3ம் தேதி முதல் 6ம் வீட்டில் செவ்வாய் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் ஒரு சில எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன் மூலம் இருக்கக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் மற்றவர்களுடைய உதவியை எதிர்பார்க்காமல் எந்த ஒரு விஷயத்திலும் நீங்கள் நேரடியாக தலையிட்டு செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.

தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சின்ன சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் உங்கள் தனி திறமையால் எதையும் சமாளிக்க கூடிய பலம் உண்டாகும்.

மாணவ மாணவியர்களுக்கு ஞாபக மறதி ஏற்படலாம் என்பதால் படிப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

வரும் நாட்களில் வளமான பலன்களை பெற துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் அர்ச்சனை செய்வது தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

மீனம்

இந்த வார ராசி பலன் | Weekly Rasi Palan in Tamil

ஜென்ம ராசியில் சூரியன், சனி, ராகு, 3-ல் குரு சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். உங்களுக்கு தற்போது ஏற்படும் சிறு உடல் உபாதை கள் காரணமாக எதிலும் சுறு சுறுப்பாக செயல்பட முடியாது. நெருங்கியவர்களால் நிம்மதிக் குறைவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் உடனிருப்பவர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது.

பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது, மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சின்ன வாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. தொழில் தொடர்பான விஷயங்களில் நீங்கள் நினைப் பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் அதனால் எதிலும் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பனிச்சுமை காரணமாக மனநிம்மதி குறைவு ஏற்படும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டா லும் அதிகாரியிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய ஒரு நேரமென்பதால் எதிலும் கவனத்தோடு இருப்பது உத்தமம்.

மாணவ மாணவியர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் தேவையற்ற வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் நேரமென்பதால் சூழலுக்கு ஏற்றவாறு நிதானத்தோடு நடந்து கொள்வது நல்லது.

சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, காலபைரவரை வழிபாடு செய்வதன்மூலமாக கெடுதிகள் குறையும்.

rasi palan today

ASTRO SIVA

Leave a Comment

error: Content is protected !!