சனி பெயர்ச்சி பலன்கள் 2025: மகர ராசி
(உத்ராடம் 2,3,4ம் பாதம்,திருவோணம்,அவிட்டம்1,2ம் பாதம் )
சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025
இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

இதுவரை உங்களை ஆட்டிப்படைத்து வந்த ஏழரைச் சனி விலகும் காலம் இது. சனி பகவான் 2-ம் இடத்திலிருந்து 3-ம் இடத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார், இனி, வரும் காலம் உங்களுக்குப் பொற்காலம் எனலாம். தன்னம்பிக்கை துளிர்விடும். இழந்த செல்வம், செல்வாக்கை எல்லாம். மீண்டும் பெறுவிர்கள்,
மருந்து, மாத்திரை என்று அலைந்து கொண்டிருந்த நீங்கள், இனி ஆரோக்கியம் அடைவீர்கள். வழக்கில் இனி வெற்றிதான். கடனை நினைத்தும் நடுங்கினீர்களே… கல்யாணம் கிரகபிரவேசத்தில் எல்லாம் உங்களை யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தார்களே, இனி அந்த நிலை மாறும்.

சனி பகவானின் பார்வைப் பலன்கள்
சனிபகவான் உங்களின் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால், பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிள்ளைகளின் உயர்படிப்பு, திருமணத்திற்காக அதிகம் செலவு செய்வீர்கள்,
சனி பகவான் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். சொத்து விவகாரங்களில் கவனம் தேவை.
சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டை பார்ப்பதால் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும்.
மற்றபடி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக் கும். சிலருக்கு அழகிய வாரிசு உருவாகும். திருமணத்துக்குக் காத்திருக்கும் அன்பர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். கடன்பட்டாவது சொந்த வீட்டில் குடிபுகுவீர்கள், பேச்சில் கவனமாக இருப்பீர்கள், யாரோ செய்த தவறால் நீங்கள் தலைகுனிந்த நிலை மாறும்.
பெண்கள் உடல் நலத்தில் மேன்மை அடைவர். மூட்டுவலி, இடுப்பு வலி போன்றவை தகுந்த சிகிச்சையால் குணமாகும். அதேபோல், பிறந்த வீட்டு உறவுப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வம்பு வழக்குகள் தீரும். சிலருக்கு நல்ல வேலை, பதவி, நல்ல சம்பளம் கிடைக்கும். மனதுக்குப் பிடித்த இடமாற்றம் கிடைக்கும்.
இதே வருடம் ராகு-கேது பெயர்ச்சியும் உண்டு. 2 மற்றும் 8-ல் வரக்கூடிய ராகு-கேது புதிய பரிமாணங்களைக் கொடுப்பார்கள், வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள். பணவரவு உண்டு. பங்குச் சந்தையில் கவனம் தேவை.”
பெண்களுக்குப் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். இணையத்தில் புதிய தொழில் தொடங்கலாம். தொட்டதெல்லாம் துலங்கும் நேரம் என்பதால், பெண்கள் அமோகமாக வளர்ச்சி பெறுவார்கள். கடன் விஷயத்தில் மட்டும் கவனமாக இருக்கவும். யாருக்கும் ஜாமீன் தர வேண்டாம். நிறைய பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உடல் நலம் மேம்படும். மாணவ மாணவியர் கல்வியில் சிறந்து விளங்குவர்.
வியாபாரிகளே, கடையை நவீன மயமாக்கு வீர்கள். அனுபமிகுந்த புது வேலையாட்கள் அமைவார்கள். விளம்பர யுக்திகளைச் சரியாகக் கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும்.
கூட்டுத் தொழில், வியாபார விருத்தி நன்கு நடைபெறும். வெளிநாட்டுத் தொடர்புகள் உருவாகும். சொத்து சேரும். நீண்ட நாள் எதிர்பார்த்துக் காத்திருந்த வாய்ப்புகள், இப்போது கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களே, பிரச்னை தந்த மேலதிகாரி மாற்றப்படுவார். தடைப்பட்ட பதவி உயர்வு உடனே கிடைக்கும். எனினும் எதன் பொருட்டும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள்.
உத்திராடம் 2, 3, 4 பாதம்:சனி பெயர்ச்சி பலன்கள்
இந்த பெயர்ச்சியால் குடும்பத்தில் அக்கறை காட்டுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். இதுவரை இருந்து வந்த மனக்கவலை நீங்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல் நிலையில் கவனம் அவசியம்.
திருவோணம் :சனி பெயர்ச்சி பலன்கள்
இந்த பெயர்ச்சியால் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.
அவிட்டம் 1, 2 பாதம்:சனி பெயர்ச்சி பலன்கள்
இந்த பெயர்ச்சியால் திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. எந்த ஒரு காரியமும் வெற்றியடைவதுடன் லாபகரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீடு. வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். வியாபார வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும்.

பரிகாரங்கள்:
- ஏழரைச் சனி விடுவதால்,திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசித்து வரலாம்.
- சீர்காழி அண்ணன் பெருமாள் கோயிலுக்கும் சென்று வழிபட, குபேர யோகம் கிட்டும்.
- ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் பத்ரகாளிக்கு விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
- ஒருமுறை குடும்பத்துடன் சென்னை காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் சிறப்பான வாழ்வை அளிக்கும்.
மேலும் படிக்க கிளிக்