சனி பெயர்ச்சி பலன்கள் 2025: கும்பராசி
(அவிட்டம் 3,4ம் பாதம்,சதயம்,பூரட்டாதி 1,2,3ம் பாதம்)
சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025
இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

இதுவரை, ஜன்மச் சனியால் சுமார் இரண்டரை ஆண்டு காலம் படாதபாடு பட்டுவந்த நீங்கள், இப்போது சந்தோஷமாக விடுதலை பெறுகிறீர்கள். குறிப்பாக சதயம், பூரட்டாதி நட்சத்திரக் காரர்கள் மனப்பாரம் நீங்கி, பூரண சந்தோஷம் பெறுவார்கள். வரும் மார்ச் 29 முதல் உங்கள் ராசியிலிருந்து விலகி 2-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப் போகிறார் சனிபகவான்.
மனதில் இருந்த எதிர்மறை எண்ணங்கள், இனம் புரியாத பயம் ஆகியவை விலகும். உடல்நிலை சீராகும். சமூகத்தில் மரியாதை கூடும். ஆழ்ந்த உறக்கம் வரும். இருந்தாலும் எளிய உடற்பயிற்சிகளும் உணவுக் கட்டுப்பாடுகளும் உங்களுக்குத் தேவைப்படுகிறது. பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். என்றாலும் பாதச் சனியாக வருவதால், கணவன் மனைவிக்குள் சிறு சிறு மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அனுசரித்து போங்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாதீர்கள்.
சனி பகவானின் பார்வைப் பலன்கள்:
சனி பகவான் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலைச்சுமை உண்டு. திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும்.
சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடனை நினைத்து அவ்வப்போது புலம்புவீர்கள்.
உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் திடீர் பணவரவு உண்டு. வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
மற்றபடி,யாருக்காகவும் சாட்சிக் கையெழுத் திட வேண்டாம். காலில் சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நெருங்கிய உறவினர்களோ, நண்பர்களோ… அதிகம் உரிமையுடன் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். வழக்குகளில் அலட்சியப் போக்கு வேண்டாம். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் பெரும் அலைச்சலுக்குப் பிறகு முடியும்.
இந்த ராசிக்காரர்கள் திருமணம் போன்ற சுபகாரியங்கள் குறித்த திட்டமிடலைச் சற்றுத் தள்ளிப்போடுவது நல்லது. தசாபுக்திகள் சரியாக இருந்தால் திருமணம் செய்யலாம். இல்லா விட்டால் தள்ளிப்போடவும். பொருளாதார நிலைமை ஓரளவுக்குச் சரியாக இருக்கும். கடன் பிரச்னைகள் வரும். கடன் வாங்கினாலும் குறைவாக வாங்குங்கள். அடுத்தவரை நம்பி எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம்.

பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். நீண்ட நாளாக இருந்து வந்த நோய்கள், வழக்குகள் யாவும் நல்லபடி தீரும். மாணவ மாணவியர் சோம்பல், மந்தம் போன்றவற்றில் இருந்து மாறி படிப்பில் முன்னேறுவர். அவிட்ட நட்சத்திர பெண்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சதய நட்சத்திர பெண்கள் தகப்பன் வழி உறவுகளிடம் பொறுமையாக இருக்கவும். பூரட்டாதி நட்சத்திரப் பெண்களுக்கு, மனரீதியான அத்தனைப் பிரச்னைகளும் மாறி நன்மைகள் வந்து சேரும். ஒரு வருட காலத்துக்கு கடன் வாங்குவதில் கவனம் தேவை.
வியாபாரிகளே, புதிய முதலீடுகள் செய்வீர்கள். விளம்பரங்கள் மூலம் தொழிலை விரிவு படுத்துவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் நிம்மதி ஏற்படும். உத்தியோகஸ்தர்களே ! அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். உங்களை ஆதரிக்கும் புதிய அதிகாரி வந்து சேர்வார். நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாகும்.
அவிட்டம் 3, 4 பாதம்:சனி பெயர்ச்சி பலன்கள்
இந்த பெயர்ச்சியால் பயணங்களால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பணவரத்து அதிகரிக்கும். மாணவர்கள் பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.
சதயம்:சனி பெயர்ச்சி பலன்கள்
இந்த பெயர்ச்சியால் எதையும் திட்டவட்டமாக பேசி காரியங்களில் குழப்பம் இல்லாமல் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதையும் ஆராய்ந்து பார்த்த பிறகே அதை செய்ய முற்படுவீர்கள் . தொட்ட காரி யம் வெற்றியில் முடிந்தாலும் சற்று கால தாமதம் ஆகலாம். பணவரத்து கூடும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பயணங்கள் சாதகமான பலனை தரும்.
பூரட்டாதி 1,2,3 பாதம்:சனி பெயர்ச்சி பலன்கள்
இந்த பெயர்ச்சியால் உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் வாக்கு வாதங்கள் உண்டாகலாம். வாழ்க்கை துணையையும் குழந்தைகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.

பரிகாரங்கள் :
- சனிக்கிழமைகளில், அனுமனுக்கு வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு சாத்தி வழிபடலாம். விஸ்வரூப அனுமனை வழிபடுவதும் சனிப் பாதிப்புகளுக்கான பரிகாரமாக அமையும்.
- கும்பகோணம் அருகில் ஆனந்த மங்கலம் என்ற ஊரில் உள்ள தசபுஜ அனுமனை வழிபட்டு வாருங்கள். சகல நன்மைகளும் உண்டாகும்.
- அமாவாசை தினத்தில் குலதெய்வத்தை வணங்கி வாருங்கள்; குடும்பம் செழிக்கும்.
மேலும் படிக்க கிளிக்