இந்த மாத ராசி பலன் | Monthly Rasi Palan in Tamil
மேஷம்

குரு 2-ல் கேது 6-ல் சஞ்சரிப்பது மிகவும் சிறப்பான அமைப்பாகும். சிறுசிறு நெருக்கடிகள் இருந்தாலும் எதையும் எதிர்கொள்ளும் திறன் உண்டாகும். பணவரவுகளும் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சூரியன், புதன், சுக்கிரன் 12-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று சிக்கன த்தோடு இருப்பது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது.
பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் செயல்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்பு டையவற்றால் லாபங்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம்.
சிவ வழிபாடு செய்வது நல்லது.
ரிஷபம்

ராசியாதிபதி சுக்கிரன், புதன், சனி, ராகு சேர்க்கை பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் 3-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன் – மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும்.
தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் ஏற்படும். கூட்டாளிகள் ஓரளவுக்கு ஆதாவாக இருப்பார்கள் உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற்று மகிழ்ச்சி அடையும் நிலை உண்டாகும்.
வெங்கடேச பெருமாளை வழிபடுவது நல்லது
மிதுனம்

உங்கள் ராசிக்கு 10-ல் புதன், சுக்கிரன் 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் வரும் நாட்களில் கிடைக்கும் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் அபிவிருத்தியை பெருக்கிக்கொள்வதுடன், எதிர்பார்த்த லாபத்தையும் பெறமுடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று கடன் சுமைகள் சற்ற குறையும்.
அரசு அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.
கடகம்

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், புதன் சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். குரு 11-ல் இருப்பதால் வளமான பலன்களை பெறுவீர்கள். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்க உதவும், புதிய வாய்ப்புகள் தேடிவரும்.
வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் லாபம் காணமுடியும் உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும்.
லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நற்பலனை தரும்.
சிம்மம்

உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், சுக்கிரன், புதன், சனி, 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரம் ஆகும். கணவன் – மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் நேரமென்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சுக்கிரன் வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும்.
தொழில், வியாபாரத்தில் சற்று மந்தநிலையை சந்திக்க வேண்டியிருக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ளமுடியும்.
குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது
கன்னி

ராசியாதிபதி புதன்- சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 7-ல் சஞ்சரிப்பதும், 9-ல் குரு சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்றாலும் 7-ல் சனி, சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது.
உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் செயல்பட்டால் மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் போட்ட முதலீட்டை எடுத்து விடுவீர்கள்.
சிவனை வழிபடுவது நல்லது.
துலாம்

உங்கள் ராசிக்கு 6-ல் சனி, ராகு, மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது.
பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத் தில் உங்கள் பணியில் கவனம் செலுத்துவது நல்லது.
தட்சிணாமூரத்தி வழிபாடு செய்வது உத்தமம்.
விருச்சிகம்

உங்கள் ராசிக்கு 5-ல் புதன், சுக்கிரன், 7-ல் குரு, மாத பிற்பாதியில் 6&ல் சூரியன் சஞ்சரிப்ப தால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடிவரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகப்பலன் அமையும் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும் உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது.
உடல் ஆரோக்கியத் தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கெளரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும்.
துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.
தனுசு

உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், சனி, ராகு, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள், தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை, சோர்வு, உற்சாகமின்மை போன்றவை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துக்கொள்வது நல்லது. அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும்.
தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படவும் உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும்.
முருக வழிபாடு செய்வது நல்லது.
மகரம்

உங்கள் ராசிக்கு 3-ல் சனி ராகு, 5-ல் குரு மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள் பொன் பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும்.
பணவரவுகளில் சரளமான நிலையிருக்கும் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறமுடியும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மகாலட்சுமியை வழிபடுவது நல்லது.
கும்பம்

உங்கள் ராசிக்கு 2-ல் சனி ராகு. 4-ல் குரு சஞ்சரிப்பது குடும்பத்தில் நிம்மதி குறைவை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதாலும், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொண்டு வளமான பலன்களை பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. அசையா சொத்துகளால் சிறுசிறு செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறமுடியும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைய எதிலும் நீங்கள் முன்நின்று செயல்பட வேண்டும்.
தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது சிறப்பு.
மீனம்

ஜென்ம ராசியில் சூரியன், சனி, 3-ல் குரு சஞ்சரிப்பத்தால் எதிலும் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். எதிலும் சிக்கனமாக இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும்.
பொருளாதாரநிலை ஏற்ற- இறக்கமாக இருக்கும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளை குறைத்து கொள்வது நல்லது முன்கோபத்தை குறைப்பது பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிட்டும் தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது.
சிவனை வழிபடுவது நல்லது