குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026: ரிஷபம்
குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம்
சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.
ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார்.
கார்த்திகை மாதம் 19ம் தேதி(05.12.2025) வெள்ளிக்கிழமை மாலை 05.25 மணிக்கு சூரிய உதயாதி 27.40 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் வக்ரகதியில் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு திரும்புகிறார்.
தேடி வந்தோருக்கு ஆதரவுக் கரம் நீட்டி, அவர்களை வாழ வைக்கும் பண்பாளர் நீங்கள். (வாக்கியப்படி) வரும் மே-11 முதல் உங்கள் ராசிக்கு, 2-ம் இடத்தில் வந்து அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான். நீங்கள்
இதுவரையிலும் ஜென்ம குரு வாக இருந்துகொண்டு, சகல வகைகளிலும் பிரச்னைகள், தடங்கல்களை ஏற்படுத்தி வந்தார் குருபகவான். இப்போது அவர் 2-ம் இடத்துக்கு வருவதால், நிம்மதி பிறக்கும். தடைகள் விலகும். இதுவரையிலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு இல்லாமல் இருந்தது; வீட்டில் உங்கள் ஆலோசனையை ஒரு பொருட்டா கவே மதிக்காத நிலை நிலை இருந்தது; முயற்சிகளில் சாண் ஏறினால் முழம் சறுக்கிய கதைதான்… இனி இந்த அவலநிலைகள் அனைத்தும் மாறும்.
வீட்டிலும் வெளியிலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். வியாபாரம், உத்தியோகம் சகலத்திலும் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். உறவினர் கள் தேடி வருவார்கள். சமூகத்திலும் அந்தஸ்து கூடும். புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ரத்த அழுத்தம், வாயுக் கோளாறு போன்ற பாதிப்புகள் நீங்கி தேக ஆரோக்கியம் கூடும். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்களுடன் உரசல் போக்கு நீங்கும்.
குரு பகவான் பார்வை பலன்கள்
குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தைப் பார்ப்பதால், உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். கடன் பிரச்னைகள் கட்டுப் பாட்டுக்குள் வரும். அடகு நகைகளை மீட்கும் வாய்ப்பு கிடைக்கும். வதந்தி, வீண் பழிகளில் இருந்து விடுபடுவீர்கள். மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும்.
குருபகவான் 8-வது வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். திட்டமிட்டபடி அயல்நாட்டுப் பயணங்கள் கூடி வரும். விசா கிடைக்கும்.
10-வது வீட்டைப் பார்ப்பதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். பிரபலங்களின் நட்பும் அவர்கள் மூலம் ஆதாயமும் உண்டாகும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் தலைமையுடன் நெருக்கமாக இருப்பார்கள். அவர்களுக்குப் பதவிகள் தேடி வரும். ஒருசிலர் புதுத் தொழில் தொடங்கி, அதில் வெற்றி பெறுவார்கள். ஏற்கெனவே இருக்கும் தொழிலில் அபரிமிதமான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
மற்றபடி, உடன்பிறந்தவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். அதேநேரம் கொஞ்சம் அலைச்சலும், செலவுகளும் உண்டு.
வியாபாரத்தில், வியாபார ஸ்தலத்தை உங்கள் ரசனைக்கு ஏற்ப மாற்றி அமைப்பீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். பாக்கிகள் எளிதில் வசூலாகும். வருடப் பிற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். இதுவரை யிலும் தேங்கிக் கிடந்த சரக்குகள், உங்களின் சாமர்த்தியத்தால் விற்றுத் பிற்றுத் தீரும். கெமிக்கல், கமிஷன், ஹோட்டல், பைனான்ஸ் வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் தேடி வருவார்கள்.
உத்தியோகத்தில் குறை கூறிக்கொண்டிருந்த மேலதிகாரி, இனி இணக்கமாவார். அவரது ஆதரவு கிடைக்கும். அதேபோல், பதவியுயர்வு சம்பந்தப்பட்ட வழக்கில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். சில வாய்ப்புகள் தேடி வரும். கணினித் துறையினர், இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவார்கள்.

பரிகாரம்:
நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது தெங்கரை. இங்கே,நெடுஞ்சாலை யிலிருந்து வலப்புறம் திரும்பும் பாதையில் சிறிது தூரம் பயணித்தால், வேளிமலை குமரன் கோயிலை அடையலாம். உங்களின் ஜன்ம நட்சத்திர நாளில், இவ்வூர் முருகனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.