இன்றைய ராசி பலன் : 18 மார்ச் 2025 – Daily Horoscope

rasi palan today

By ASTRO SIVA

Published on:

Facebook Page Join WhatsApp Channel
rasi palan today

இன்றைய ராசி பலன் : 18 மார்ச் 2025

மேஷம்

Daily Horoscope

உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். கொடுத்த கடன் வசூலாகும்.

ரிஷபம்

Daily Horoscope

உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நண்பர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை கூடும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும்.

மிதுனம்

Daily Horoscope

பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மன சங்கடங்கள் ஏற்படலாம். உறவினர்களிடம் ஏற்படும் வாக்குவாதங்கள் மன உளைச்சலை உண்டாக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள்.

கடகம்

Daily Horoscope

குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

சிம்மம்

Daily Horoscope

உங்களுக்கு குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி மன நிம்மதி உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் பணிசுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கன்னி

Daily Horoscope

உங்களுக்கு பணவரவு சற்று சுமாராக இருக்கும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். உடன் பிறப்புகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் லாபம் அடைய முடியும்.

துலாம்

Daily Horoscope

உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்

Daily Horoscope

குடும்பத்தினரிடம் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

தனுசு

Daily Horoscope

நீங்கள் எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.

மகரம்

Daily Horoscope

நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.

கும்பம்

Daily Horoscope

நீங்கள் குடும்பத்தில் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருளாதார நிலை பாதிப்படையாது. உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

மீனம்

Daily Horoscope

மன குழப்பத்துடன் இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. பயணங்களை தவிர்ப்பது நல்லது.

rasi palan today

ASTRO SIVA

Leave a Comment

error: Content is protected !!