---Advertisement---

இன்றைய ராசி பலன் : 19 மார்ச் 2025 – Daily Horoscope

RASI PALAN TODAY TAMIL
On: March 19, 2025 2:09 AM
Follow Us:
rasi palan today
---Advertisement---

இன்றைய ராசி பலன் : 19 மார்ச் 2025

மேஷம்

Daily Horoscope

உங்கள் ராசிக்கு பகல் 02.06 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனமாக இருப்பது, வெளியாட்களிடம் வீண் பேச்சை தவிர்ப்பது உத்தமம்.

ரிஷபம்

Daily Horoscope

பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். சுபசெலவுகள் செய்ய வேண்டிய வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும்.

மிதுனம்

Daily Horoscope

நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

கடகம்

Daily Horoscope

பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும். கடன் பிரச்சினைகள் சற்று குறையும்.

சிம்மம்

Daily Horoscope

பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். வியாபாரத்தில் கடன் பிரச்சினைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் கிட்டும்.

கன்னி

Daily Horoscope

நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி அடைய எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. போட்ட திட்டங்கள் நிறைவேற சில தடங்கல்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்

Daily Horoscope

குடும்பத்தில் வீண் செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடன் பிறந்தவர்கள் ஓரளவு உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை

விருச்சிகம்

horoscope sign 03

பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் தொடங்குவதில் இருந்த சிக்கல்கள் விலகும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்துக்கள் விஷயத்தில் சாதகப் பலன் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு

Daily Horoscope

உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சிக்கல்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மனதிற்கு நிம்மதியை தரும். சுபகாரிய முயற்சிகளில் நற்பலன் கிட்டும்.

மகரம்

Daily Horoscope

உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

கும்பம்

Daily Horoscope

பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். பெண்களுக்கு பணிச்சுமை சற்று குறைந்து மனநிம்மதி உண்டாகும்.

மீனம்

Daily Horoscope

உங்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு பகல் 02.06 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மதியத்திற்கு பிறகு தடைகள் விலகி அனுகூலங்கள் ஏற்படும்.

Join WhatsApp Channel

Join Now

Join Facebook Page

Join Now
error: Content is protected !!