சனி பெயர்ச்சி பலன்கள் 2025: மேஷ ராசி
(அஸ்வினி ,பரணி ,கார்த்திகை 1ம் பாதம் )
சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025
இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
தன்மானத்திலும், அதிகாரத்திலும் அதிக ஆர்வம் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு இதுவரை லாப வீட்டிலிருந்து சனி பகவான் 29.03.2025 முதல் 22.02.2028 மேஷ ராசிக்கு விரைய ஸ்தானமான மீனத்தில் அமர்கிறார். வேலை சுமையும், அலைச்சலும் அதிகரிக்கும். செலவுகள் வரம்பு மீறும். எதிர்பாராத விரயங்கள் ஏற்பட்டு சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும். எதற்கும் வளைந்து கொடுக்காத உங்களை, அடக்கம் உடையவர்களாக மாற்றும்.
தங்கள் ராசிக்கு 12 ம் இடமாகிய மீனத்தில் அமரும் சனிபகவான் தொழிலில் தொல்லை, பணவரவில் தடை, அனாவசிய செலவுகள் போன்ற பாதகமான பலனை தந்தாலும், சில திடீர் வருமானத்தையும் தந்து, அதை சமாளிக்கும் ஆற்றலையும் தருவார். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். வீட்டை புதுப்பித்து கட்ட வங்கி கடன் கிடைக்கும். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சிக்கனமான இருக்க நினைத்தாலும் அவசியமான செலவுகள் சேமிப்பை கரைக்கும்.குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகள் தோன்றி மறையும்.
மனதில் பட்டதை பேசி மற்றவர்களின் மனக்கசப்புக்கு ஆளாக நேரிடும் என்பதால் கவனம் தேவை. பழைய கடன்களால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மகனின் கல்வி, வேலை பற்றிய கவலை வந்து செல்லும். மகளுக்கு வரன் தேடும் போது நன்றாக விசாரித்து முடிவு செய்ய வேண்டும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. மற்றவர்களுக்கு அநாவசிய வாக்குறுதிகள் எதுவும் தர வேண்டாம்.
சனி பார்வை பலன்கள்
தங்களது ராசிக்கு 11-ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனி பகவான்,12ம் இடத்திற்கு செல்கிறார்.12ம் இடம் சுப ஸ்தானமாக கருத்துவதற்கில்லை.சனி பகவான் தங்கள் ராசிக்கு 2,6, மற்றும் 9மிடத்தை பார்வையிடுகிறார். 2ம் இடம் தனஸ்தானமாகும், 6மிடம் சத்ரு மற்றும் ரோகத்தையும், 9மிடம் பாக்கியங்களையும் குறிக்கும்.
சனி உங்கள் தனஸ்தானத்தை பார்ப்பதால் அடிக்கடி பணத்தட்டுப்பாடுகள் உண்டாகும். கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகலாம்.
சனி 6ம் வீட்டை பார்ப்பதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
சனி பகவான் ஒன்பதாம் வீட்டை பார்ப்பதால் தந்தை வழி சொந்தங்களுக்கு தொல்லை உண்டாகும்.
பெண்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
12ஆம் இடத்தில் வரும் சனி பகவானால் குடும்பத்தில் சுப செலவுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. வெகு நாட்களாக தொடர்பில் இல்லாத உறவினரும் சொந்தம் கொண்டாடி வருவார்கள்.
மாணவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
கல்வியில் திறமை வெளிப்படும் காலம் இது. படிப்பில் கவனமும், அதிக ஆர்வம் காட்டினால் அதிக மதிப்பெண்களை குவிக்கலாம். கணிதம் மற்றும் பிறமொழிப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, அதிக நேரம் ஒதுக்கினால் வெற்றி பெறலாம்.
உத்தியோகஸ்தர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
வேலை பல கூடும். மூத்த அதிகாரிகளுடன் சிறிய முரண்பாடுகள் வந்து போகும். சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். பதவி உயர்வை எதிர்பார்க்க முடியாது. பழைய சம்பள பாக்கி கைக்கு வர தாமதமாகும். அரசாங்க நிறுவனங்களில்கணக்கராகவும்,கனிணி பிரிவில் வேலை செய்பவருக்கும், சனி பகவானால் உயர்வு உண்டு. வங்கி பணியாளர்களுக்கு உபரி ஊதியம் இரட்டிப்பாகும்.
சுய தொழில் செய்வோருக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
மூலதன செலவுகள் கூடும். புதிய இயந்திரம் வாங்குவதால் பணத்தட்டுப்பாடு வரும். வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.
அஸ்வினி நட்சத்திரம்
செய்தொழில் பின்னடைவு, முதலீடுகளால் நஷ்டம், உறவுக்குள் பகை போன்ற துன்பமான பலன்கள் ஏற்படும் என்றாலும், கிடைக்கும் அனுபவம் எதிர்காலத்தை வளமாக்கும்.
பரணி நட்சத்திரம்
எதிர்பாராமல் செல்வம் வரும் என்றாலும் அதிக செலவுகள் ஏற்பட்டு எதிர்கால தேவைக்காக சேமிக்க முடியாமல் போகலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் பெரும் நட்பு மட்டுமே லாபமாக அமையும்.
கார்த்திகை 1ம் பாதம்
எதை எடுத்தாலும் தடையும் காலதாமதமும் ஏற்பட்டு மனக்கவலையே ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
பரிகாரம்
சனிக்கிழமை ஆடைகளை தானமாக கொடுத்தால் தடைகளை கடக்க உதவும்.
மேலும் படிக்க கிளிக்