சனி பெயர்ச்சி பலன்கள் 2025: துலாம் ராசி
(சித்திரை 3,4ம் பாதம் ,சுவாதி,விசாகம் 1,2,3ம் பாதம் )
சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025
இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
சனிபகவான் மார்ச் 29 முதல் உங்கள் ராசிக்கு 6-ம் இடமாகிய மீனத்தில் வந்து அமரவுள்ளார். திருக்கணிதப்படி நிகழவுள்ள சனிப் பெயர்ச்சியில் ஜாக்பாட் அடிக்கும் ராசிகளில் துலாம் ராசியே முதலிடத்தில் உள்ளது.
எதிர்பாராத வகையில் தனலாபம் பெருகும். ஒருவேளை, பணவரவு இல்லையெனில், வந்த வாய்ப்பை நீங்கள் தவறவிட்டு விட்டீர்கள் என்றே அர்த்தம். ஆக, இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றமான வாழ்வைத் தரப்போகிறது எனலாம்.
பக்குவமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். வாழ்க்கைத் துணைவர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருவீர்கள். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் உண்டு. பாதை மாறிச் சென்ற பிள்ளைகள் திருந்துவார்கள். மொத்தத்தில் இந்த இரண்டரை ஆண்டுகள் உங்களுக்கு அமோகமாக அமையும்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்:
சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும்.
சனி பகவான் 8-ம் வீட்டைப் பார்ப்ப தால், வாகனங்களை இயக்கும்போது கவனம் தேவை. அலைபேசியில் பேச வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். அந்தரங்க விஷயங்களை அடிமனதில் தேக்குவது நல்லது.
சனி 12-ம் வீட்டைப் பார்ப்பதால், வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும்.
உங்களில் சிலர், சொந்த வீடு கட்டி குடி புகுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்திற் காகச் சேமிப்பீர்கள். மகனுக்கு அருகிலுள்ள இடத்திலேயே தெரிந்த சம்பந்தத்தில் பெண் அமையும். கையில் பணம், பொருள் தங்கும்.
பழைய கடனைக் கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். வீடு கட்டவும், வாங்கவும், தொழில் தொடங்கவும் வங்கிக் கடன் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு நீங்கும்.
மார்ச் 30 முதல் மே 15-ம் தேதி வரையிலும் எதிலும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.சனியும் ராகுவும் ஒன்றாக 6-ம் இடத்தில் இருப்பதால் கடன் அதிகம் வாங்கும்படி நேரும். கவனத்தோடு இருங்கள்.
குருபகவான் 9-ம் இடத்துக்கு வரும்போதுதான் கடன் பிரச்னைகள் தீரும் என்பதால் பொறுமை அவசியம். வண்டி, வீடு போன்றவை சேரும். பெண்களுக்கு வீட்டில் நிம்மதி கிடைக்கும். உறவுகளிடம் இருந்த பிரச்னைகள் தீரும்.
இந்த ராசியைச் சேர்ந்த மாணவ மாணவியருக்கு இது நல்ல காலம். வெளிநாடு சென்று பயிலும் வாய்ப்பும் உருவாகும்.
ராகு-கேது பெயர்ச்சி, குருபெயர்ச்சிக்குப் பிறகு, பிள்ளைவரத்துக்காகக் காத்திருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு மகப்பேறு வாய்க்கும். சுப காரியங்களில் தடைகள் நீங்கும். 2025 செப்டம்பருக்குப் பிறகு சகலமும் நன்மையாக நடக்கும்.. மங்கல காரியங்கள் நடைபெறும். உடல் நலம் மேம்படும்.
சித்திரை 3, 4 பாதம் நட்சத்திர சனி பெயர்ச்சி பலன்கள்
எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள் தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம், கட்சித் தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பர். படைப்புகளை வெளியிட சில போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள்.
சுவாதி நட்சத்திர சனி பெயர்ச்சி பலன்கள்
எந்த நேரத்திலும் தகுதி குறையாமல் செயல்படுவீர்கள். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலையவேண்டி இருக்கும். புதிய பொறுப் புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும்.
விசாகம் 1, 2, 3ம் பாதம் நட்சத்திர சனி பெயர்ச்சி பலன்கள்
குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தின ருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
பரிகாரங்கள்:
செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துர்கை அம்மனுக்கு எலுமிச்சைப் பழ மாலை சாத்தி வழிபடலாம். இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்கள் விநாயகர், சரஸ்வதி வழிபாடு பலன் தரும். சனிக்கிழமைகளில் விநாயகர் அகவல் படிக்கலாம்.
உத்தியோகம், தொழில் தொடர்பான பிரச்னை களுக்கு சனிக்கிழமை மற்றும் அஷ்டமியில் பைரவருக்கு விளக்கேற்றி புனுகு சாத்தி வழிபட நிவர்த்தி கிடைக்கும். 6-ம் இடத்தில் சனி சஷ்டமச் சனி… வருமானம் அதிகரித்தாலும் விரயமும் உருவாகும். இதற்கு சனிக் கிழமைகளில் காக்கைக்கு உணவிட்டு நிவர்த்தி பெறலாம்.
மேலும் படிக்க கிளிக்