சனி பெயர்ச்சி பலன்கள் 2025: சிம்ம ராசி

rasi palan today

By ASTRO SIVA

Updated on:

Facebook Page Join WhatsApp Channel
சனி பெயர்ச்சி பலன்கள் 2025

சனி பெயர்ச்சி பலன்கள் 2025: சிம்ம ராசி

(மகம் ,பூரம் ,உத்திரம் 1ம் பாதம் )

சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025

இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

சனி பெயர்ச்சி பலன்கள் 2025

சனி பகவான் வரும் மார்ச் 29-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு இடத்தில் வந்து அமரப்போகிறார். 8-‘அஷ்டமத்துச் சனி கஷ்டம் தருமே என்று கலங்கவேண்டாம். எல்லா விஷயங்களிலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொண்டால், எவ்வித பாதிப்புகளும் உண்டாகாது.

அஷ்டமத்துச் சனி நடைபெறும் காலமானது, புதுவித அனுபவங்களால் உங்களைச் செம்மைப்படுத்தும் காலம் என்று புரிந்து செயல்பட்டால் போதும்,

இந்த வருடத்தில் குருப்பெயர்ச்சியும், ராகு-கேது பெயர்ச்சியும் நிகழவுள்ளன. குரு லாப ஸ்தானத்தில் வந்தாலும்கூட, சனியின் ஆதிக்கத்தால் சிற்சில தேவையற்ற பிரச்னைகள் உருவாகலாம். குறிப்பாக மாணவர்கள் கல்வியில் அதீத கவனம் செலுத்தவேண்டும். வெளி உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். மனதையும் உடலையும் உற்சாகமாக ஆரோக்கியமாகப் பேணுவதில் கவனம் செலுத்துங்கள்.

குடும்பத்தை எடுத்துக்கொண்டால், கணவன் மனைவிக்குள் பிரச்னையை ஏற்படுத்திப் பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். ஆகவே, வீட்டு விஷயத்தில் மூன்றாவது நபரை தலையிட அனுமதிக்காதீர்கள், வங்கிக் காசோலைகள், சொத்து ஆவணங்கள், நகை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கலிலும் சுவனம் தேவை. எவருக்காகவும் பொறுபேற்கக் கூடாது. கடன் வாங்கும் சூழல் வந்தாலும், தகுதிக்கு மீறி கடன் வாங்குவது கூடாது.

சனி பெயர்ச்சி பலன்கள் 2025

சனிபகவானின் பார்வை பலன்கள்:

சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பு தால் சாதுர்யமாகப் பேசுவீர்கள். ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டுப் பிரச்னைகளில் சிக்கிக்கொள்வீர்கள், எதிர்பார்த்த பணம் வரும்.

சனி பகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், சிலரை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பீர்கள், பூர்வீகச் சொத்தில் பிரச்னைகள் வந்து சரியாகும்.

மற்றபடி இந்த ராசிக்காரர்கள். திருமணம் போன்ற சுபகாரியங் களைச் சற்றுத் தள்ளிப் போடுவது நலம். நன்கு ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கவேண்டியது அவசியம்.

அஷ்டமத்தில் சனி இருப்பதால் வாகன விஷயத்தில் கவனம் வேண்டும். பொறுமை அவசியம். நட்பைத் தேர்ந்தெடுப்பதில் சிந்தித்து செயல்படவும். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் சிம்ம ராசிக்காரர்கள் நற்பலன்களை அடைவார்கள் எனலாம். எனினும் அரசு விஷயங்களில் அலட்சியம் காட்டாதீர்கள்.

உத்தியோகத்தைப் பொறுத்தவரையிலும் இந்த ராசிக்காரர்களில் சிலர், வெளியூரில் பணியாற்ற வேண்டி வரும். வாய்ப்பு இருந்தால் இவர்கள், குடும்பத்தை விட்டு விலகி வேலை பார்ப்பது நன்மையை அளிக்கும். புது அதிகாரியால் சிற்சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். எனினும் சம்பளம் உயரும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் சற்றுத் தாமதமாகக் கிடைக்கும்.

பெண்கள், எந்தவொரு விஷயத்திலும் பொறுமையாகவும் தெளிவாகவும் இருப்பது அவசியம். கடன் விஷயத்தில் அலட்சியம் வேண் டாம். தெய்வப் பலம் உங்களைப் பாதுகாக்கும். அலுவலகம் செல்லும் பெண்கள், பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்; எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும்.

Sani peyarchi 2025

மகம் நட்சத்திர சனி பெயர்ச்சி பலன்கள்

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும் குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.

பூரம் நட்சத்திர சனி பெயர்ச்சி பலன்கள்

பணவரத்து திருப்தி தரும். நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். அரசியல்வாதிகள் கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். எனினும் கட்சி மேல்மட்டத்தில் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவர். பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்பு தேடிவரும். சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம். மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை.பாடங்கள் எளிமையாக தோன்றும்.

உத்திரம் 1ம் பாதம் நட்சத்திர சனி பெயர்ச்சி பலன்கள்

துணிச்சலாக காரியங்களில் ஈடுபடுவீர்கள். நியாயமாகவும், நேர்மையாகவும் அதனை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரங்கள்:

நவகிரக ஹோமம் மற்றும் மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்வது நல்லது. காணிப்பாக்கத்தில் உள்ள கணபதி கோயிலில் நடக்கும் ஹோமத்தில் கலந்து கொள்வது நல்ல பலனைத் தரும். அருகிலுள்ள சிவாலயங்களில் நடைபெறும் பிரதோஷ வழிபாடுகளில் கலந்து கொண்டு வழிபடுங்கள். அதனால் நன்மைகள் கூடிவரும்.

ஒருமுறை சுருட்டப்பள்ளி நஞ்சுண்டேஸ்வரரைத் தரிசித்து வாருங்கள்; தோஷங்கள் அனைத்தும் விலகும்.

RASI PALAN TODAY | இன்றைய ராசி பலன்
இன்றைய நல்ல நேரம்
மாத ராசி பலன்
வார ராசிபலன்
சனி பெயர்ச்சி பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
பல்லி விழும் பலன்கள்
கனவு பலன்கள்
rasi palan today

ASTRO SIVA

Leave a Comment

error: Content is protected !!