சனி பெயர்ச்சி பலன்கள் 2025: ரிஷப ராசி
(கார்த்திகை 2,3,4ம் பாதம்,ரோகிணி,மிருகசீரிடம் 1,2ம் பாதம் )
சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025
இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

ஆடம்பரமான வாழ்க்கையில் அதிக விருப்பம் கொண்டரிஷப் ராசிக்காரர்களுக்கு. இந்த சனிப்பெயர்ச்சி, புகழ், செல்வம், சொத்துச் சேர்க்கை ஆகியவற்றைத் தருவதாக அமையும். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கடனாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித்தந்து முடிப்பீர்கள். பழைய பிரச்னைகளுக்கு புதிய அணுகு முறையால் தீர்வு கிடைக்கும். அதிகாரமான பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியை மறுபடியும் தொடங்குவீர்கள்.
சுப நிகழ்ச்சிகளால் குதூகலம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும். உங்களை அவமானப்படுத்தியவர்கள் வலிய வந்து பாராட்டுவார்கள்.
திருமணத்தடை நீங்கும். திருமணம் கூடி வரும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களின் ஆதரவு உயரும்.அரசாங்கக் காரியங்கள் நல்லபடி முடியும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து நட்பு பாராட்டுவார்கள். செலவுகள் குறைந்து சேமிப்புகள் கூடும். தாய்வழி சொந்தங்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வழக்குகள் சாதகமாக முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

சனி பார்வை பலன்கள்
இதுவரை, தங்களது ராசிக்கு 10ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்த சனி பகவான் 11 ஆம் இடத்திற்கு செல்கிறார். சனி பகவான், தங்கள் ராசியையும், 5ஆம் இடம் மற்றும் 8 ஆம் இடத்தை பார்வையிடுகிறார். ஜென்ம இராசியை பார்வையிடுவதால் சிறு சங்கடங்கள் உண்டாகும். ஆனாலும், ரிஷப ராசிக்கு தர்ம, கர்மாதிபதியாக, சனி பகவான் இருப்பதால், சமாளிக்கலாம்.
5 ஆம் இடம் குழந்தைகள், யூக வாணிபம், ஆன்மீக ஈடுபாடு இவற்றை குறிக்கும். குல தெய்வ வழிபாட்டில் சில தடைகள் உண்டாகலாம். குழந்தைகள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை.
8 ஆம் இடம் எதிர்பாராத விபத்துக்களைசு குறிக்கும் வாகனம் ஓட்டுவதில் அதிக கவனம் தேவை.
சனி, உங்கள் ராசிக்கு 11-வீட்டிலிருப்பதால் தைரியம் கூடும் உறுதியான முடிவுகளை எடுக்க தொடங்குவீர்கள். வீடு,மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். மூத்த சகோதர வகையில் அனுகூலம் உண்டு. வீட்டு உபயோக சாதனங்களை வாங்குவீர்கள்.
மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். புத்திரரால் சில தொல்லைகள் உண்டாகும். நீண்டகாலமாக தடைப்பட்ட நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.
சனி ராசிக்கு 11 ம் வீட்டிலிருப்பதால், சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். பணவரவு உண்டு. புதிய திட்டங்கள் நிறைவேறும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயமடைவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள்.
சனிபகவான் சாதகமான பலன்களை தந்தாலும், மகனிடம் விரோதம், புதிய வாய்ப்புகள் கைவிட்டு போகுதல் போன்ற சங்கடமான இலவச இணைப்புகளையும் தருவார்.
பெண்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
- பதினோராமிடத்து சனியால் திடீர் பணவரவும், மூத்த சகோதரரின் ஆதரவும் கிடைக்கும்.
- நண்பர்களிடையே உங்கள் பெருமை உயரும்
- உங்களிடம் உதவி கேட்டு வருவோர் எண்ணிக்கை உயரும்.
மாணவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
- படிப்பில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை மாறும். ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.
- நினைவாற்றல் அதிகரிக்கும்.
- போட்டி தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள்.
- ஆர்வமான பிரிவில் அறிவு விருத்தி பெற முடியும்.
வேலை மற்றும் சொந்த தொழில்
- பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். உங்கள் திறமைக்கு உரிய பாராட்டும் பரிசம் கிடைக்கும் .
- சுயதொழில் செய்வோருக்கு தொழிலில் முன்னேற்றம் காணலாம்.
- குறித்த காலத்தில் பணிகளை முடிக்க முடியும். வேலையின் சுமை கணிசமாக குறையும்.
- புதிய சிந்தனைகளை அமல்படுத்த முடியும்.
- வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். புதிய கிளைகள் தொடங்குவீர்கள்.

கார்த்திகை நட்சத்திரம் -2,3,4ம் பாதம்
- அரசு ஆதரவு கிடைக்கும்.
- புதிய தொழில் அனுபவமும் அறிமுகமும் லாபமாக கிடைக்கும்.
ரோகிணி நட்சத்திரம்
- இதுவரை உங்கள் அன்பை புரிந்து கொள்ளாத உறவுகளுக்கு நல்ல பாடம் புகட்டும் காலமாக அமையும்.
மிருகசீரிட நட்சத்திரம்-1,2 ம் பாதம்
- சிலரை நம்பி பணம் கொடுத்து ஏமாறுவீர்கள்.
- முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது.
- அவசர முடிவுகள் வேண்டாம். சிலர் உங்களை தூண்டி விட்டாலும் பொறுமையை கடைப்பிடிப்பதே நல்லது.
பரிகாரம்
திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபட்டால் வாழ்வில் தொல்லைகள் மறைந்து, வாழ்க்கையில் சுடர்விடும் காலம் வரும்.
மேலும் படிக்க கிளிக்