சனி பெயர்ச்சி பலன்கள் 2025: தனுசு ராசி
(மூலம்,பூராடம்,உத்ராடம் 1ம் பாதம் )
சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025
இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

சனிபகவான் வரும் மார்ச் 29-ம் தேதி முதல் உங்களின் ராசிக்கு 4-ம் இடத்துக்கு வருகிறார். மீன ராசியில் தொடர்ந்து சஞ்சரிக்க உள்ளார். அவர் சுக வீடான 4-ம் வீட்டில் அமர்வதால் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தைப் பெறுவீர்கள்.
குடும்பத்தில் மனைவியின் கை ஓங்கும். சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள், அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால், சின்னச் சின்ன வேலைகளைக் கூட அலைந்து முடிக்க வேண்டி வரும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கிக்கொள்வீர்கள்.
மேலும், குடும்ப சொத்துப் பிரச்னைகளில் கவனமாக இருக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் சொத்துப் பத்திரம் உயில் எழுதுவது. சொத்தை விற்பது போன்றவை வேண்டாம். சொத்துப் பிரச்னைகளால் உறவினர் மற்றும் நண்பர்களிடம் பகை உருவாகலாம். அர்த்தாஷ்டமச் சனி நடைபெறும் காலம் என்றாலும் குருபகவான் அருளால் திருமணம் நடைபெறும். எனினும், சம்பந்திகளிடையே பிரச்னைகள் வரலாம். உறவுகளிடையேயும் மோதலும் பிரச்னையும் உருவாகும். பள்ளி மாணவ, மாணவியர் செய்யாத தவறுக்கு தண்டனை பெற வேண்டி வரலாம். நட்பில் கவனமாக இருங்கள். மற்றபடி சொத்து பணவரவு எல்லாம் நன்றாக இருக்கும்.
குரு பார்வை நன்றாக இருந்தாலும் சனி பகவானால் சங்கடங்கள் உருவாகும். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. வேளையில் கவனம் தேவை. நட்பு கூட பகையாக மாறும். உயர் பதவி கிடைக்கும்; இடமாறுதல் கிடைக்கும். அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். விலை உயர்ந்த பொருள்கள், தங்க ஆபரணங்களை இரவல் தரவும் வேண்டாம், பெறவும் வேண்டாம். கணவன் மனைவிக்குள் சந்தேகம் வேண்டாம்.
தாய்வழிச் சொத்துக்களில் சிக்கல்கள் வரக் கூடும். அரசின் அனுமதிப் பெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து வீடு கட்ட வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். எனினும் நீண்ட நாள்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசாகிடைத்து அயல் நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

சனி பகவானின் பார்வைப் பலன்கள்:
சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பு தால் அவ்வப்போது சோர்வு, களைப்பு வந்து நீங்கும்.
சனிபகவான் உங்களின் 6-ம்வீட்டைப் பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள், வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
சனிபகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். புதுப் பொறுப்புகளும் உங்களை நம்பித் தரப்படும்.
மற்றபடி வியாபாரம் – தொழில் விருத்தியாகும். உடன்பிறந்தவர்களால் பிரச்னைகள் வரும். விவாதங்கள், சண்டைகள் வேண்டாம்.
வேலைக்குப் போகும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் உருவாகும். தியானம், யோகா என மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளவும். வியாபாரிகளே, கறாராக இருங்கள். வாடிக்கையாளர்களைக் கனிவாக நடத்துங்கள்.
உத்தியோகஸ்தர்களே, சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள், பணிகளை முடிப்பதில் அலட்சியம் காட்டாதீர்கள். மேலதிகாரிகள் உங்களைக் குறைகூறினாலும் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
மூலம்:சனி பெயர்ச்சி பலன்கள்
இந்த பெயர்ச்சியால் எந்தகாரியம் செய்தாலும் அதில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும்.
பூராடம்: சனி பெயர்ச்சி பலன்கள்
பணவரத்து திருப்தி தரும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் அலுவல கம் தொடர்பான பணிகளில் முழு மூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.
உத்திராடம் 1ம் பாதம்: சனி பெயர்ச்சி பலன்கள்
வீண் அலைச்சல் உண்டாகலாம். மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப் பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாணவர் களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள்.

பரிகாரங்கள்:
இந்த ராசியைச் சேர்ந்த மூலம் நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமையில் அனுமனுக்கு நல்லெண்ணெய் அல்லது உளுந்து நைவேத்தியங்கள் படைத்து வழிபடலாம்.
பூராடம் அன்பர்கள் சனிக்கிழமையில் சிவனுக்கு வில்வார்ச்சனை செய்ய வேண்டும்.
உத்திராடம் நட்சத்திரக்காரர்கள், மதுரை சொக்க நாதரையும் திருக்கோஷ்டியூர் சௌம்ய நாராயணரையும் தரிசித்து வாருங்கள். சகல நன்மைகளும் உண்டாகும்.
மேலும் படிக்க கிளிக்