---Advertisement---

New Year Rasi Palan 2025 in Tamil Thulam | துலாம் ராசி ஆங்கில புத்தாண்டு பலன்கள்

RASI PALAN TODAY TAMIL
On: March 27, 2025 1:35 PM
Follow Us:
thulam rasi palan today துலாம் ராசி பலன் இன்று
---Advertisement---

New Year Rasi Palan 2025 in Tamil Thulam | துலாம் ராசி ஆங்கில புத்தாண்டு பலன்கள்

துலாம் ராசியை பொறுத்தவரை, அதிக அளவு துலாம் ராசிக்காரர்கள் பெரிய பெரிய பணியில் இருப்பார்கள். நீதி அரசர்களாக நீதிபதிகளாக என பல உயர்ந்த பதவிகளை வகிப்பவர்கள் உங்கள் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். நியாயம் நேர்மை என்று வாழ்பவர்கள் நீங்கள் தான். தன் பிள்ளைகள் தவறு செய்தாலுமே அதில் நியாயம் என்னவோ அதை மட்டுமே பேசுவீர்கள். மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்களாக இருப்பீர்கள். இன்று நாம் யாரையாவது மனதளவில் அல்லது உடல் அளவிலோ காயப்படுத்தினால் நாளை நம்மை  யாரேனும் காயப்படுத்தி விடுவார்களோ என்பதை யோசித்து நடப்பீர்கள். ஏதேனும் சிக்கல் பிரச்சினை ஏற்பட்டு விடுமோ என்பதற்காகவே அது வேண்டாம் என்று விலகி இருப்பீர்கள். அடுத்தவர்களுக்கு நல்லது செய்வோம் நமக்கும் நல்லதே நடக்கும் என்று நம்புவீர்கள். 

இந்த 2025 ஆம் ஆண்டு உங்கள் ராசிக்காரர்களுக்கு ஒரு அற்புதமான பல நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் ஒரு ஆண்டாக அமைந்துள்ளது.  2024 அற்புதமான ஆண்டாகத்தான் அமையும் என்று நம்பி இருந்த நிலையில்  ஏன் அவ்வாறு  நடக்கவில்லை என்று கேட்டால், 2024 ஆம் ஆண்டில் வந்த குரு பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு சற்று சுமாராகவே இருந்த நிலையில் அவர்களுக்கு பெரிதாக எந்த ஒரு லாபமோ நன்மையோ இல்லாமல் இருந்திருக்கும். ஆனால் இந்த 2025 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சி ஆனது உங்களுக்கு சாதகமாக வர உள்ளது. மே மாதம் நடக்கவிருக்கும் குரு பெயர்ச்சியில் குரு பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது இடத்திற்கு வர உள்ளதால் பல நன்மைகள் வந்து சேரும். 

சுப செலவு: 2025 ஆம் ஆண்டு உங்கள் ராசியில் இருந்து மூன்றாம் வீட்டில் பிறந்துள்ளது.அதனால் இந்த ஆண்டு உங்கள் ராசிக்காரர்களுக்கு ஒரு அற்புதமான ஆண்டாக பிறந்துள்ளது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி  அடையும். உங்கள் ராசியில் வரக்கூடிய சுப செலவு என்ன என்று பார்த்தால் வீடு, மனை வாங்குதல், புதிதாக வண்டி வாகனம் வாங்குதல். இது போன்ற நல்ல காரியங்களுக்கான செலவாகவே இருக்கும்.

வியாபாரம்: 2025 ஆம் ஆண்டு நீங்கள் எதிர்பாராத அளவில் உங்களின் அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும். முக்கிய  விஐபிகளுடன்  நட்பு உண்டாகும். வியாபாரம் பணவரவு நன்றாக இருக்கும்.2025 ஆம் ஆண்டு பிறக்கும்பொழுது உங்கள் ராசியின் பத்தாவது இடத்தில் செவ்வாய் இருப்பதால், வேலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது, நீங்கள் பார்க்கும் வேலையில் அதிகமான வருமானம் வருவதற்கான சாத்திய கூறுகள் காணப்படுகிறது. வரப்போகும் ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் தொடங்கும் வியாபாரம் அல்லது நீங்கள் தற்பொழுது செய்து கொண்டிருக்கும் வியாபாரம் அமோகமாக  இருக்கும். நீங்கள் பார்க்கும் உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக இருந்த பல பிரச்சனைகள் சுமூகமாக முடியும். இந்த 2025 ஆம் ஆண்டு மேலும் பல நன்மைகளை கொடுத்து, வியாபாரத்தில் லாபம், நல்ல உத்தியோகம், பண வரவு அதிகரிப்பு, என பல  முன்னேற்றங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். 

திருமணம்: இதுவரை உங்கள் குடும்பத்தில் கணவன் மனைவிகளிடையே ஏற்பட்டு வந்த ஈகோ பிரச்சனை மற்றும் கருத்து வேறுபாடுகள் முற்றிலும் காணாமல் போய்விடும். இதுவரை சனி பகவான் ஐந்தாம் இடத்தில் இருந்து கொண்டு உங்களை படாதபாடு படுத்திக் கொண்டிருந்தார். பிள்ளைகளுக்கு திருமணம் ஆகவில்லை என்று கவலையோடு இருந்திருப்பீர்கள். திருமணம் முடிந்த பிறகு இப்படி ஒரு இடத்தில் என் பிள்ளைகள் கஷ்டப்படுகிறார்கள் என்று மனவேதனையோடு புலம்பி கொண்டிருப்பீர்கள். வரப்போகும் மே 14ஆம் தேதி குரு பெயர்ச்சிக்குப் பிறகு இவை அனைத்தும் தலைகீழாக மாறப்போகிறது. அதற்கு முன்னரே மார்ச் மாதம் நடக்கக்கூடிய சனிப்பெயர்ச்சியிலிருந்து உங்களுக்கு பல நன்மைகள் வந்து சேரும். உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் கைகூடி நல்லபடியாக திருமணம் நடைபெறும். உங்கள் குழந்தைகள் யாரேனும் திருமணம் முடிந்து கணவனுடன் சேர்ந்து இல்லாமல் பிரிந்து   வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்களும் அவர்களின் கணவனோடு சேர்ந்து வாழக்கூடிய ஒரு சூழ்நிலை  உருவாகக்கூடும்.  குழந்தை பாக்கியம் இல்லாத துலாம் ராசிக்காரர்களுக்கு  குழந்தை பிறக்க போக நேரம் வந்துவிட்டது. உங்கள் பிள்ளைகள் யாரேனும் குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம்  உண்டாகக்கூடும்.

தரிசனம்: 2025 ஆம் ஆண்டு பல நன்மைகளை உங்களுக்கு அள்ளித் தரும் ஒரு ஆண்டாக அமைவதற்கு நீங்கள் ஸ்ரீ சக்கரத்து ஆழ்வாரே வணங்கி வர வேண்டும். 

தானம்: காது கேளாதவர்களுக்கு உங்களால் முடிந்த சிறு உதவிகளை உங்களுக்கு முடியும் பட்சத்தில் செய்து வருவதன் மூலம் பல நன்மைகளை நீங்கள் பல வழிகளில் பெறலாம். வாழைப்பூவை தானமாக கொடுத்து வரவும். 2025 ஆம் ஆண்டு ஒரு சிறந்த அற்புதமான வெற்றி ஆண்டாக அமைவதற்கு வாழ்த்துக்கள்.

இதையும் படிக்கலாமே,

RASI PALAN TODAY | இன்றைய ராசி பலன்
இன்றைய நல்ல நேரம்
மாத ராசி பலன்
வார ராசிபலன்
சனி பெயர்ச்சி பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
பல்லி விழும் பலன்கள்
கனவு பலன்கள்

Join WhatsApp Channel

Join Now

Join Facebook Page

Join Now
error: Content is protected !!