---Advertisement---

New Year Rasi Palan 2025 in Tamil Simmam | சிம்மம் ராசி ஆங்கில புத்தாண்டு பலன்கள்

RASI PALAN TODAY TAMIL
On: March 27, 2025 1:35 PM
Follow Us:
simma rasi palan today சிம்மம் ராசி பலன் இன்று
---Advertisement---

New Year Rasi Palan 2025 in Tamil Simmam | சிம்மம் ராசி ஆங்கில புத்தாண்டு பலன்கள்

கம்பீரத் தோற்றமும் கம்பீர நடையும் கம்பீரப் பேச்சு திறமையும் உடைய சிம்ம ராசிக்காரர்களே! சமயோசித புத்தியை அதிக அளவில் பயன்படுத்தக்கூடியவர்கள் நீங்கள் தான். பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தாலும் மனசுக்குள்ளும் பேச்சளவிலும் ஒரு குழந்தைத்தனம் உங்களுக்குள் அடிக்கடி எட்டிப் பார்க்கும். விளையாட்டுத்தனமாகவும் மகிழ்ச்சியாகவும் எப்பொழுதும் காணப்படுவீர்கள். வெகுளியான பேச்சு உடையவர்களாக இருப்பீர்கள். இவை அனைத்தும் உங்களுக்கு ஒரு பக்கம் பலமாகவும் மறுபக்கம் இதுவே உங்களுடைய ஒரு மிகப்பெரிய பலவீனமாகவும் அமையும். உங்களுடன் நெருங்கி இருப்பவர்களுக்கு உங்களுடைய கம்பீரமும் தெரியும் குழந்தைத்தனமும் தெரியும். வெகுளியான பேச்சும் தெரியும். ஆனால் வெகு தூரத்திலிருந்து உங்களிடம் பேசுபவர்களும் உங்களைப் பார்ப்பவர்களுக்கும் உங்களுடைய கம்பீரம் மட்டுமே பெரிய அளவில் தெரியும். 

2025 ஆம் ஆண்டு உங்கள் ராசியில் இருந்து ஐந்தாவது ராசியில் வருடம் பிறந்திருப்பதால், தொட்டதெல்லாம் துலங்கும் ஒரு ஆண்டாக உங்களுக்கு அமைந்துள்ளது. அனைத்து காரியங்களிலும் வெற்றி மட்டுமே அடைவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. உங்களை மரியாதை குறைவாக நடத்தியவர்கள் அனைவரும் உங்களை பாராட்டும் படியாகவும் உங்களை பற்றி பெருமையாக பேசும் படியாகவும் மாறும். 

வியாபாரம்: நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் உங்களுக்கு சீக்கிரம் கை கூடும். பிறந்துள்ள 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு ஒரு லாபம் தருமாண்டாக அமைந்துள்ளது. பணவரவு அதிக அளவில் இருக்கும். 2025 ஆம் ஆண்டு பிறக்கும் பொழுது,உங்கள் ராசியில் குரு பகவான் பத்தாம் இடத்தில் உள்ளார். இந்த பத்தாம் இடத்தில் இருப்பது சிலருக்கு சில சமயத்தில் ஏதேனும் ஒரு பயத்தை உண்டாக்கும். நிரந்தர உத்தியோகம் இல்லை  அல்லது வேலையில் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமோ என்ற பயம் உங்களை சூழ்ந்து இருக்க வாய்ப்புள்ளது. மே 14ஆம் தேதிக்கு பிறகு குரு பகவான் உங்களுக்கு சாதகமாக வருகிறார். லாப ஸ்தானத்தில் குரு பகவான் உங்கள் ராசியில் உட்கார உள்ளார். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பணவரவு நன்றாகவும் திருப்திகரமானதாகவும் அமையும். பணி உயர்வு, வருமான அதிகரிப்பு அனைத்தும் மே மாதத்திற்கு பிறகு கைக்கூடும். உங்கள் மனம் திருப்தி அடையும் ஒரு புதிய வேலை உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. 

திருமணம்: 2025 ஆம் ஆண்டு தொடங்கும் நேரத்தில் உங்கள் ராசிக்கு சுக்கிரன் சாதகமாக  உள்ளார். அதனால் திருமணம் ஆகாத சிம்ம ராசி அன்பர்களுக்கு  விரைவில் இந்த ஆண்டு நல்லவரன் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.மகளுக்கு திருமணம் கைகூடும் நேரம் வந்துவிட்டது. 

சுப செலவு: வீடு மனை வாங்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைப்பதால், பணவரவு அதிகரிக்கும், அந்த பணத்தை வைத்து வீடு மனை வாங்குவதற்கான சாத்தியம் உள்ளது. 2025ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு ஒரு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது.மகளுக்கு நல்ல ஒரு வேலை கிடைக்கக்கூடிய அமைப்பு உள்ளது. 

கவனம் தேவை: மார்ச் மாதம் வரக்கூடிய சனி பெயர்ச்சி உங்களுக்கு பெரிதாக சாதகமாக இல்லை. மார்ச் மாதம் 29ஆம் தேதி வரக்கூடிய சனி பெயர்ச்சி உங்களுக்கு சுமாராக உள்ளது.மார்ச் மாதம் 29ஆம் தேதி  முதல் உங்கள் ராசிக்கு சனி பகவான் அஷ்டமத்து சனியாக வர உள்ளார். அதனால் அனைத்து விஷயங்களிலும் கொஞ்சம் கவனம் தேவை.பண விஷயங்களில் அதிக அளவு கவனம் தேவை. தள்ளுபடி, பணம் இரட்டிப்பு போன்ற வார்த்தைகளை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாறாதீர்கள். 

தரிசனம்: இந்த 2025 ஆம் ஆண்டு அனைத்து விஷயங்களிலும் நீங்கள் வெற்றி பெறுவதற்கும், நன்மைகளை அடைவதற்கும் பைரவரை வழிபட்டு வாருங்கள். ஸ்ரீ கால பைரவரை வழிபட்டு வருவதன் மூலம் அனைத்து விதத்திலும் நன்மைகள் வந்து சேரும். 

தானம்: உங்களால் முடிந்தவர்களுக்கு கோதுமை மாவு அல்லது கோதுமையை தானமாக இந்த வருடம் முழுவதும் கொடுத்து வாருங்கள்.கைகளை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த சிறு உதவிகளை செய்து வாருங்கள். 2025 ஆம் ஆண்டு லாபம், வெற்றி, புகழ் மற்றும் பல நன்மைகளை அடையும் ஒரு ஆண்டாக அமைவதற்கு வாழ்த்துக்கள்.

இதையும் படிக்கலாமே,

RASI PALAN TODAY | இன்றைய ராசி பலன்
இன்றைய நல்ல நேரம்
மாத ராசி பலன்
வார ராசிபலன்
சனி பெயர்ச்சி பலன்கள்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
பல்லி விழும் பலன்கள்
கனவு பலன்கள்

Join WhatsApp Channel

Join Now

Join Facebook Page

Join Now
error: Content is protected !!