New Year Rasi Palan 2025 in Tamil Rishabam | ரிஷபம் ராசி ஆங்கில புத்தாண்டு பலன்கள்
கடந்த 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு ஒரு சோதனையாண்டாக அமைந்திருக்கும். பல சிக்கல்கள், இன்னல்கள் தேவை இல்லாத பிரச்சனைகள் என பல விதத்தில் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். கடன் பிரச்சனை,கணவன் மனைவிக்குள் தேவை இல்லாத சண்டை சச்சரவு என இருந்து வந்திருக்கும்.
2025 ஆம் ஆண்டு இவை அனைத்திற்கும் எதிர்மறையாக அமையும். பல வகையான யோகங்களை அள்ளித் தரும் ஒரு ஆண்டாக அமைந்துள்ளது, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரக்கூடிய சனிப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக வரஉள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் சனி பகவான் வருவதால், பணவரவு நன்றாக இருக்கும்.பல வருடங்களாக விற்க முடியாமல் இருந்த நிலம், தற்பொழுது நீங்கள் எதிர்பார்த்த பணத்தைவிட அதிக அளவில் விற்ப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது.
சுப செலவு: 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு பணப்புழக்கம் அதிக அளவில் இருக்கும். அனைத்து விதத்திலும் வெற்றியை காண்பீர்கள். சுக செலவை என்று எடுத்துக் கொண்டால் வீடு கட்டுதல், மனை வாங்குதல் போன்றவை ஏற்படும். கடன் வாங்கியாவது வீடு கட்டக்கூடிய ஒரு சுபசெலவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தொழில் செய்வதற்கோ அல்லது வீடு கட்டுவதற்கோ கடன் வாங்குவதற்கு விண்ணப்பித்திருந்தால் எளிதில் உங்கள் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, வங்கி கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
வியாபாரம்: 2025 ஆம் ஆண்டு உங்கள் தொழிலில் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.ஏன் இந்த தொழிலை தொடங்கினோம் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, ஓய்வு எடுக்க கூட நேரம் கிடைக்காமல் இருப்பது போல வியாபாரம் வெகு சிறப்பாக நடக்கும். சொந்தத் தொழில் தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. உங்கள் தொழிலை விட, பல மடங்கு பெரிய அளவில் தொழில் செய்பவர்களுடன் சேர்ந்து கைகோர்த்து உங்கள் தொழிலை மேம்படுத்துவதற்கான ராஜயோகம் காணப்படுகிறது.மே மாதம் நடக்கவிருக்கும் குரு பெயர்ச்சி உங்கள் ராசியில் இரண்டாம் இடத்திற்கு வருவதால், வேளையில் இடமாற்றம், வருமானம் அதிகரிப்பு, பணி உயர்வு இன்னும் பல யோகங்கள் காத்துக் கொண்டிருக்கிறது.
ஆரோக்கியத்தில் கவனம்: தாயை கவனிப்பதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் கொள்ள வேண்டும். உங்கள் அம்மாவிற்கு ஏதேனும் உடல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. இருப்பினும் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
திருமணம்: மே 14ஆம் தேதி முதல் குரு பகவான் ரிஷப ராசிக்கு சாதகமாக வர உள்ளார். இதனால் பிரிந்திருந்த கணவன் மனைவிகள் ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள் கைகூடி வர உள்ளது. கணவன் மனைவிகள் நெருக்கமாக இருப்பீர்கள்.உங்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான தருணம் கிடைக்கும். தள்ளிப்போன மற்றும் தடைபட்ட திருமணம் கைகூடும்.மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை உங்கள் ராசிக்கு சாதகமாக உள்ளதால் நீண்ட நாள் திருமணம் ஆகாதவர்களுக்கு இந்தாண்டு திருமணம் நல்லவிதமாக முடியும்.
தரிசனம்: இந்த 2025 ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாகவும், ராஜ யோகா ஆண்டாகவும் உங்களுக்கு அமைவதற்கு பெருமாளை தரிசிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஸ்ரீ நரசிங்க பெருமாளை வணங்க வேண்டும். நரசிங்க பெருமாள் தரிசிப்பதன் மூலம் நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் கை கூடும்.
தானம்: மனநலம் பாதிப்பு அடைந்த யாரேனும் சிலருக்கு உங்களால் முடிந்த சிறு உதவிகளை செய்யுங்கள். மாதுளை பழம் தானமாக கொடுத்து வாருங்கள். 2025 ஆம் ஆண்டு ராஜயோக ஆண்டாகவும், அதிர்ஷ்டமான ஆண்டாகவும் உங்களுக்கு அமைவதற்கு வாழ்த்துக்கள்.
மேலும் படிக்க கிளிக்
RASI PALAN TODAY | இன்றைய ராசி பலன் |
இன்றைய நல்ல நேரம் |
மாத ராசி பலன் |
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் |
பல்லி விழும் பலன்கள் |
கனவு பலன்கள் |