New Year Rasi Palan 2025 in Tamil Mesham | மேஷம் ராசி ஆங்கில புத்தாண்டு பலன்கள்
மேஷ ராசி அன்பர்களே! இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு பல மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு ஆண்டாக அமைந்துள்ளது. உங்களுடைய ராசிக்கு ராகு பகவான் லாப ஸ்தானத்தில் வருவதால் வீடு, மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் பார்க்கும் வேலைக்கு தற்பொழுது வாங்கும் வருமானத்தை விட மேலும் அதிக வருமானம் உயர்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. புதுவிதமான யோசனைகளை கொண்டுள்ள மேஷ ராசி அன்பர்களே, உங்களின் சமயோசித புத்தியைக்கண்டு நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் தலைமை பொறுப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டு தனுசு ராசியில் பிறக்கிறது, உங்கள் ராசியில் இருந்து ஒன்பதாவது ராசியாக தனுசு ராசி வருவதால் அனைத்து விதத்திலும் வெற்றியை அதிக அளவில் காணக்கூடிய ராசிக்காரர்கள் நீங்கள்தான்.
சுப செலவு: 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரக்கூடிய சனி பெயர்ச்சியில், சனி பகவான் உங்கள் ராசியில்,ஏழரைச் சனியாக விரையச் சனியாக வருகிறார். விரையச் சனியாக இருந்தாலும் வீடு வாங்குதல், நிலம் வாங்குதல், இன்னும் சுப செலவுகளாக உங்களுக்கு வரவுள்ளது.
வியாபாரம்:. வெளிநாட்டுக்கு செல்லுதல், பணி உயர்வு போன்ற பல நன்மைகளை அள்ளித் தருகிறார். 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் வரக்கூடிய ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசியில் பதினோராம் இடத்திற்கு வர உள்ளார், இது உங்களுக்கு சாதகமாக இருக்கும். பதினோராம் இடம் என்பது லாப ஸ்தானம் என்பதால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது, இல்லையெனில் உங்கள் குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவருக்கு வருமான உயர வாய்ப்புகள் காணப்படுகிறது.சொந்தமாக தொழில் தொடங்குவதற்கான யோகம் 2025ஆம் ஆண்டு பிரகாசமாக காணப்படுகிறது.
ஆரோக்கியத்தில் கவனம்: உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஜூன் 6-ம் தேதி முதல் மிதுனம் மற்றும் கடகம் ஆகிய இரு ராசிகளுக்கும் மாறி மாறி பயணிப்பதால், உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. இரவு நேரம் கண் விழிப்பது, அதிக உணவு எடுத்துக் கொள்வது, இவற்றை தவிர்ப்பது மிக நல்லது.நடைபயிற்சி மேற்கொள்வது, உடற்பயிற்சி சிறிது எடுத்துக் கொள்வது, என்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு நல்ல முன்னேற்றத்தை தரும்.
திருமணம்: பிரிந்திருந்த கணவன் மனைவிகள் ஒன்று சேர்வதற்கான ஒரு சுப ஆண்டாக உங்களுக்கு அமைந்துள்ளது.மேஷ ராசிக்காரர்களான உங்களின் குழந்தைகளுக்கு தடைப்பட்டு கொண்டிருந்த திருமண ஏற்பாடுகள் இந்த ஆண்டு விரைவில் நிச்சயிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் நிறைய காணப்படுகிறது.மேஷ திருமணம் கை கூடாத மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் கூட திருமணம் நடந்து முடிவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் காணப்படுகிறது.
கவனம் தேவை: குரு பகவான் மேஷ ராசிக்காரரான உங்களுக்கு மே மாதம் வரை சாதகமாக உள்ளார். உங்களின் ராசி படி இரண்டாம் வீட்டில் குரு பகவான் வசிக்கிறார். மே மாதத்திற்கு பிறகு குரு பகவான் மூன்றாம் இடத்திற்கு மறைவதால், உங்களின் செலவில் கட்டுப்பாடு தேவை.சிக்கனம் சிறுசேமிப்பு என்பது உங்களுக்குத்தான் அதிகமாக இந்த வருடத்தில் பொருந்தும். யாருக்கும் எந்த ஒரு வாக்குறுதியையும் சட்டென கொடுத்து விடாதீர்கள். பேசும் வார்த்தை தெளிவாகவும் கவனமாகவும் பேச வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை.
தரிசனம்: 2025 ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாக உங்களுக்கு அமைவதற்கு சுவாமிமலை முருகரைச் சென்று வழிபடுங்கள்.
தானம்: உங்கள் வீட்டில் அருகே உள்ள அல்லது உங்களுக்கு தெரிந்த அல்லது நீங்கள் செல்லும் இடத்திற்கு ஏதேனும் கால்களை இழந்தவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள். நெல்லிக்கனியை தானமாக கொடுங்கள். 2025 ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாகவும்,அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறும் ஆண்டாகவும் அமைய வாழ்த்துக்கள்.
மேலும் படிக்க கிளிக்
RASI PALAN TODAY | இன்றைய ராசி பலன் |
இன்றைய நல்ல நேரம் |
மாத ராசி பலன் |
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் |
பல்லி விழும் பலன்கள் |
கனவு பலன்கள் |