New Year Rasi Palan 2025 in Tamil Magaram | மகரம் ராசி ஆங்கில புத்தாண்டு பலன்கள்
இன்றளவும் நேர்மையான பாதையில் நடந்து நேர்மையாக வாழ்க்கையை ஓட்டுபவர்கள் நீங்கள் தான். மன்னனாக இருந்தாலும் சரி,பெற்ற பிள்ளையாக இருந்தாலும் சரி, எந்தப் பக்கம் உண்மை இருக்கிறதோ அந்த பக்கம் மட்டுமே பேசுவீர்கள். நேர்மையாக நேர் வழியில் சென்று ஒரு ரூபாய் உழைத்தாலும் அந்த ஒரு ரூபாயை வைத்து சமாளிப்பீர்கள் தவிர தவறான பாதையில் சென்று கிடைக்கும் கோடி ரூபாய் தேவை இல்லை என்று நினைப்பவர்கள் நீங்கள் தான். பல இன்னல்களையும் பல சோகங்கள் பல துன்பங்கள் வெளியே சொல்ல முடியாத பல கஷ்டங்களை அனுபவித்து இருப்பீர்கள். ஒரு நாள் ரெண்டு நாள் அல்ல பத்து வருடங்கள் இது போன்ற கஷ்டங்களை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அனுபவித்துள்ளீர்கள்.
உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை வெளியே சொல்ல தயங்குவீர்கள். எங்கே நமது கருத்தை சொன்னால் பிறரது மனம் புண்பட்டு விடுமோ அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று உங்களுக்குள்ளேயே நீங்கள் வைத்துக் கொண்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்திருப்பீர்கள். இதுபோன்ற நிலைமையும் நீங்கள் பட்ட 10 வருட கஷ்டமும் 2024ம் ஆம் ஆண்டுடன் முடியப்போகிறது. புதிய ஆண்டான 2025 உங்களுக்கு பல நன்மைகளை தரக்கூடிய ஒரு சாதகமான ஆண்டாக உள்ளது. உங்கள் ராசிக்கு யோகாதிபதியான சுக்கிரனை கொண்டு பிறந்துள்ளது இந்த புத்தாண்டு. 2025 ஆம் ஆண்டு பிறக்கும் பொழுது உங்கள் ராசியில் இரண்டாம் இடத்தில் சுக்கிரன் இருக்கிறார். அதனால் இந்த புத்தாண்டு உங்களுக்கு ஒரு அமோகமான வெற்றியை தரக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. வருகின்ற 2025 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் நடக்கக்கூடிய சனிப்பெயர்ச்சி உங்களுக்கு பல நன்மைகளை தரும். தற்பொழுது உங்கள் ராசியில் உள்ள சனிபகவான் பத்து ஆண்டுகளாக உங்களைப் படாத பாடு படுத்தி வந்துள்ளார். மார்ச் மாதத்திற்கு பிறகு உங்கள் கொடிய நிலை தலைகீழாக மாறும். மார்ச் மாதத்தில் வரக்கூடிய சனிப்பெயர்ச்சியுடன் உங்களுக்கு இருந்த ஏழரை சனி முழுமையாக நிறைவடைய போகிறது.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு பல நன்மைகள் வந்து குவியும். பிரிந்திருந்த கணவன் மனைவிகள் ஒன்று சேர்வதற்கான நேரம் வந்துவிட்டது. இத்தனை வருடங்கள் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு ஒரு விடிவுகாலமாக 2025 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. உங்கள் குடும்பத்தில் தற்பொழுது உள்ள சோகம் அல்லது எதையோ பறிகொடுத்த சூழ்நிலை விலகி மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக உள்ளது. உங்களை மதிக்காதவர்கள் உங்களைப் பார்த்தும் தெரியாதவர்கள் போல சென்றவர்கள், இனி உங்களை தேடி வந்து வழு கட்டாயமாக பேசுவார்கள். தற்பொழுது குரு பகவான் உங்கள் ராசியில் பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார். வரப்போகும் மே மாத குரு பெயர்ச்சியில், குரு பகவான் உங்கள் ராசியில் ஆறாம் இடத்திற்கு மறைய போகிறார்.
கவனம் தேவை: குரு பகவான் உங்கள் ராசியின் ஆறாம் இடத்தில் மறையப் போவதால் மே மாதத்திற்கு பிறகு நீங்கள் உங்கள் செலவில் அதிக சிக்கனமும் உங்கள் பணவரவில் அதிக அளவு கவனமும் கொண்டிருக்க வேண்டும். யாரையும் எளிதில் நம்பி விடக் கூடாது. பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் இருத்தல் வேண்டும். யாரையும் நம்பி எந்த ஒரு முன் பின் தெரியாத ஊழியர்களிடம் பணத்தை முதலீடு செய்து ஏமாந்து விடாதீர்கள். இரவு நேர பயணங்களை அல்லது நீண்ட தூரப் பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. உங்கள் மேல் தேவை இல்லாத பலி தேவையில்லாத பொய் சொற்கள் வந்து விழும் அவற்றை கண்டும் காணாமல் இருந்து விட்டீர்கள் என்றால் பல மடங்கு நன்மை தரும். இந்த வருடத்தில் வரக்கூடிய ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு சாதகமாக உள்ளார். உங்கள் ராசியில் ராகு பகவான் இரண்டாம் வீட்டிலும் கேது பகவான் எட்டாம் வீட்டிலும் வந்து அமரப் போகிறார். பணம் விஷயத்தில் அதிக கவனம் தேவை. நண்பர் என்று நம்பி அல்லது தெரிந்தவர்கள் என்று நம்பி எதையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
வியாபாரம்: 2025 ஆம் ஆண்டு பொருத்தவரை உங்கள் ராசிக்கு வியாபாரம் அமோகமாக இருக்கும். புது இடத்திற்கு உங்கள் வியாபாரத்தை அல்லது கடையை மாற்றுவதற்கான யோகம் உள்ளது. புதிய இடத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் கொள்வீர்கள்.
தரிசனம்: 2025 ஆம் ஆண்டு உங்கள் வாழ்க்கையிலும் இலட்சியத்திலும் வெற்றி பெறுவதற்கு ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாளை தரிசிப்பது நல்லது. திருப்பதி சென்று பெருமாளை தரிசித்து வருவது நன்மையை தரும்.
தானம்: உங்கள் வாழ்வில் நன்மைகள் வந்து சேருவதற்கு தேங்காயை தானமாக கொடுத்து வாருங்கள். வீடு வாசல் இல்லாமல் தினமும் உடுத்திக் கொள்ள துணி இல்லாமல் இருக்கும் சாலையோரம் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உங்களால் முடிந்த துணிமணிகளை எடுத்துக் கொடுப்பதன் மூலம் உங்களுக்கு நல்லது நடக்கும். 2025 ஆம் ஆண்டு ஆரோக்கியமாகவும் வளமாகவும், மகிழ்ச்சியாகவும் அமைவதற்கு வாழ்த்துக்கள்.
மேலும் படிக்க கிளிக்
RASI PALAN TODAY | இன்றைய ராசி பலன் |
இன்றைய நல்ல நேரம் |
மாத ராசி பலன் |
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் |
பல்லி விழும் பலன்கள் |
கனவு பலன்கள் |