New Year Rasi Palan 2025 in Tamil Kumbam | கும்பம் ராசி ஆங்கில புத்தாண்டு பலன்கள்
உங்கள் மனசாட்சியிடம் உங்கள் உள் மனதில் இருக்கும் உங்களிடமே நீங்கள் அதிகமாக பேசிக் கொண்டிருப்பீர்கள். உங்களுக்குப் பிடித்த ஒருவருக்காக ஒன்று கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் எப்படியாவது கஷ்டப்பட்டு எவ்வளவு தொலைவில் இருந்தாலும் தேடி எடுத்து வந்து கொடுத்து விடுவீர்கள், ஆனால் உங்களுக்கு பிடிக்காத ஒருவருக்காக உங்கள் பக்கத்தில் அல்லது உங்கள் கையில் இருந்தால் கூட கொடுக்க மாட்டீர்கள். கும்ப ராசிக்காரர்கள் ஆன நீங்கள் உங்கள் குடும்பத்தில் எவ்வளவு நபர்கள் இருந்தாலும் நீங்கள் தான் உங்கள் குடும்பத்தின் கும்பமாக இருப்பீர்கள், வீட்டின் குத்து விளக்காகவும் இருப்பவர்கள் நீங்கள் தான். அதிக அளவில் ஆற்றலும் அழகும் கொண்டவர்கள் நீங்கள் தான்.
இந்த 2025 ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் கடந்த ஐந்து ஆண்டுகளாக பல கஷ்டங்களை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல நீங்கள் தொடங்கிய வேலை 99 சதவீதம் நன்றாக முடிந்து மீதி ஒரு சதவீதம் பல நாட்களாக இழுத்துக் கொண்டு இருப்பது உங்களுக்கு பல வழிகளில் வேதனையை கொடுத்திருக்கும். எளிதாக முடியக்கூடிய பல விஷயங்கள் இன்று, நாளை என்று தள்ளித்தள்ளி போய்க்கொண்டே இருந்திருக்கும். 2025 ஆம் ஆண்டு இது போன்ற அனைத்து பிரச்சனைகளும் விலகி நீங்கள் தொடங்கும் ஒவ்வொரு வேலையும் முழுமையாக நல்லபடியாக முடியும்.
உங்களால் செய்து முடிக்க கூடிய வேலையை முடித்து தருவதாக நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை உங்களால் செய்ய முடியாமல் போய் இருக்கலாம். அல்லது செய்ய பல தடங்கலாகவே இருந்திருக்கலாம். இவை அனைத்தும் 2025 ஆம் ஆண்டு எந்த ஒரு தடங்கலும் இன்றி முடியும். 2025 ஆம் ஆண்டு பிறக்கும் பொழுது உங்கள் ராசியில் ஜென்ம சனி இருப்பதால், உணவு இருந்தும் அதை உட்கொள்ள முடியாத சூழ்நிலை தூங்குவதற்கான நேரம் இருந்தும் தூங்க முடியாமல் தவிப்பதற்கான சூழ்நிலை இருந்திருக்கும் இவை அனைத்தும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு மாறிவிடும். புதிய ஆண்டின் மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று சனிப்பெயர்ச்சியில் சனி பகவான் உங்கள் ராசியில் இரண்டாம் வீட்டிற்கு செல்ல உள்ளார். இதனால் பல வகையில் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். உடலில் இருந்த சோர்வு மனசோர்வு களைப்பு போன்றவை நீங்கும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை முடித்து வைப்பீர்கள். அனைத்து விதத்திலும் வெற்றியும் மகிழ்ச்சியையும் அடையப் போகிறீர்கள்.
கடந்த இரண்டு வருடங்களாக குரு பகவான் உங்களை படாத பாடு படுத்தி உள்ளார். அதனால் வெளியில் வரும் பிரச்சினைகளை விட வீட்டுக்குள்ளே அதிக அளவு பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும். தினமும் வீட்டிற்கு செல்லும் பொழுதே இன்று என்ன பிரச்சனை இருக்குமோ என்று பயந்து கொண்டே செல்ல வேண்டி இருந்திருக்கும். ஒவ்வொரு நாளும் வீட்டிற்குள் செல்லும் பொழுதும் தெய்வத்தை வணங்கிக் கொண்டே சென்றிருப்பீர்கள். நீங்கள் ஒன்று சொன்னால் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அதை வேறொன்றாக நினைத்து கற்பனை செய்து கொண்டு உங்களை தவறாக நினைத்து கொண்டிருப்பார்கள். இந்த ஒரு கடினமான சூழ்நிலை உங்களுக்கு மாறப்போகிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி வரப்போகும் குரு பெயர்ச்சியில் குரு பகவான் உங்கள் ராசியில் ஐந்தாம் இடத்தில் வந்து அமர்ந்து உங்கள் ராசியை பார்க்கப்போகிறார். இதனால் மே மாதம் 14ஆம் தேதி முதல் உங்கள் குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் அன்பு பாசம் மற்றும் அன்யோன்யம் அதிகரிக்கும்.
வியாபாரம்: மே மாத குரு பெயர்ச்சிக்குப் பிறகு பணவரவு அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு சீக்கிரம் வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக கட்ட முடியாமல் தவித்த கடன்களை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுவதற்கான சூழ்நிலை உருவாகும். மே மாதம் 14ஆம் தேதி குரு பெயர்ச்சிக்குப் பிறகு உங்கள் வியாபாரம் அமோகமாக நடக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு, பண வரவு இருக்கும்.
ஆரோக்கியத்தில் கவனம்: மே மாதம் 18ம் தேதி அன்று ராகு கேது பெயர்ச்சியில் உங்கள் ராசியில் வந்து அமர்வதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அலர்ஜி, அரிப்பு மற்றும் ஏதேனும் இன்ஃபெக்சன் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனால் சருமம் மீது சற்று கவனமாக இருக்க வேண்டும். பயப்படும் அளவிற்கு எந்த ஒரு பெரிய பாதிப்பும் இருக்காது.
தரிசனம்: 2025 ஆம் ஆண்டு முழுவதும் வெற்றி பெறுவதற்கான ஒரு ஆண்டாக அமைவதற்கு ஸ்ரீ சரபேஸ்வரரை வணங்கி வாருங்கள்.
தானம்: 2025 ஆம் ஆண்டு நன்மை தரும் மற்றும் வெற்றி தரும் ஆண்டாக அமைவதற்கு வேர்க்கடலையை தானமாக கொடுத்து வாருங்கள். மூட்டை சுமக்கும் தொழிலாளிகளுக்கு உங்களால் இயன்ற சிறு உதவிகளை செய்து வாருங்கள். 2025 ஆம் ஆண்டு நன்மைகளை அள்ளித்தரும் வெற்றி ஆண்டாக அமைவதற்கு வாழ்த்துக்கள்.
மேலும் படிக்க கிளிக்
RASI PALAN TODAY | இன்றைய ராசி பலன் |
இன்றைய நல்ல நேரம் |
மாத ராசி பலன் |
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் |
பல்லி விழும் பலன்கள் |
கனவு பலன்கள் |