New Year Rasi Palan 2025 in Tamil Kanni | கன்னி ராசி ஆங்கில புத்தாண்டு பலன்கள்

rasi palan today

By ASTRO SAKTHI

Published on:

kanni rasi palan today கன்னி ராசி பலன் இன்று

New Year Rasi Palan 2025 in Tamil Kanni | கன்னி ராசி ஆங்கில புத்தாண்டு பலன்கள்

யாருக்காகவும் எதற்காகவும் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்ற வாக்கியத்திற்கு  சொந்தகாரங்கள் நீங்கள் தான்.நேர்மை உண்மை கடைபிடித்து வாழ்வதால் யாருக்கும் பயமின்றி துணிச்சலாக இருப்பீர்கள்.

இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் ஒரு ஆண்டாக அமைந்துள்ளது. இந்தாண்டு பிறக்கும் பொழுதே உங்கள் ராசியில் சுக்கிர பகவான் உக்காந்திருக்கிறார். நான்காம் வீட்டில் சந்திரன் உக்காந்திருக்கிறார். ஒன்பதாம் வீட்டில் குரு பகவான் இருக்கிறார். 

வியாபாரம்:  வியாபாரத்தை பொருத்தவரை அதிக லாபம் வரும்.மே 14ஆம் தேதி முதல் குரு பகவான் உங்கள் ராசியில் பத்தாம் இடத்திற்கு வருவதால், வியாபாரத்தில் தொழிலில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் விரும்பாத வேலையை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட வேண்டி இருக்கும். அதனால் மே மாதத்திற்கு பிறகு உங்கள் உத்தியோகத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். வேலை நிமித்தமாக ஏதேனும் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதனால் வேலை பொறுத்தவரை அதிக கவனம் தேவைப்படும். கவனமாக இருந்து கொண்டீர்கள் என்றால் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். 

சுப செலவு : இந்த ஆண்டின் முதல் நாளிலேயே சந்திர பகவான் மற்றும் குரு பகவான் உங்கள் ராசியில் இருப்பதால் இந்த வருடம் உங்களுக்கு அதிகப்படியான வருமானம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எதிர்பார்க்காத இடத்திலிருந்து திடீர் பணவரவு,  திடீரென்று வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீட்டிற்கு செல்வதற்கான அடிக்கல் நாட்டக்கூடிய சூழ்நிலை உருவாகும். சொந்தமாக வாகனம் வாங்குதல், சொந்தமாக தொழில் தொடங்குதல் போன்ற எதிர்பாராத பல நற்செய்திகள் உங்களுக்கு உண்டாகும். 

திருமணம்: 2025 ஆம் ஆண்டு குரு பகவானின் அனுக்கிரகம் உங்களுக்கு அதிக அளவில் கூடிக் கொண்டே செல்வதால் கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் நிச்சயிக்கப்படும். பொறுப்பில்லாத மகன் இருக்கிறான் என்று நினைப்பவர்களுடைய மகன்கள் நீங்கள் எதிர்பாராத அளவிற்கு ஒரு நல்ல நிலைக்கு வருவதற்கான சாதகமான அமைப்பு காணப்படுகிறது. குடும்பத்தில் உள்ள கணவன் மனைவிகளிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். 

ஆரோக்கியத்தில் கவனம்: உங்கள் ராசியில் கேது இருப்பதால், உடல்நலத்தை பற்றி நீங்கள் கவலை பட்டுக்கொண்டே இருப்பீர்கள்.ஏதேனும் பெரிய நோய் இருக்குமோ என்றும் அதனால் ஏதேனும் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு விடுமோ என்று பயந்து கொண்டே இருந்திருப்பீர்கள். அதனால் மற்றவர்களிடம் ஆலோசனையும் கேட்டு இருப்பீர்கள். நன்றாக தூங்கினால் போதுமானது மற்றபடி எந்த ஒரு நோயும் இல்லை என்று மருத்துவர்கள் கூறி இருப்பார்கள். இந்த 2025 ஆம் ஆண்டு உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மே 18ஆம் தேதி கேது உங்கள் ராசியில் இருந்து விலகி செல்வதால், மே மாதத்திற்கு பிறகு ஆரோக்கியம் மேலும் கூடும், அழகு கூடும், சுறுசுறுப்பாக செயல்பட தொடங்குவீர்கள். 

வரும் மார்ச் மாதம் 25ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுவதால், கோபம் அடிக்கடி வருவதற்கான வாய்ப்புகள் சூழ்நிலைகள் உண்டாகும். சிறிய விஷயங்களுக்கு மற்றும் தேவையில்லாத விஷயங்களுக்கு கோபம் வரும். இது போன்ற கோபத்தை ஆரம்பத்திலேயே குறைத்துக் கொள்ள கற்றுக் கொண்டாலே போதுமானது. வாழ்க்கை நலமாக இருக்கும். 

தரிசனம்: இந்த 2025 ஆம் ஆண்டு எந்த ஒரு பிரச்சனையும் இன்றி, பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அனைத்து நன்மைகளையும் பெற வேண்டும் என்பதற்காக ஸ்ரீ விநாயகப் பெருமானை  வழிபட்டு வாருங்கள். 

தானம்: உங்கள் தெருவில் வரும் துப்புரவு தொழிலாளிகளுக்கு அல்லது நீங்கள் எங்கேயும் துப்புரவு தொழிலாளிகளை கண்டால் அவர்களுக்கு ஏதேனும் உங்களால் முடிந்த சிறு உதவிகளை செய்யுங்கள். துவரம் பருப்பை தானமாக கொடுத்து வருவதன் மூலம் இந்த 2025 ஆம் ஆண்டு நன்றாக அமையும். மேலும் இந்த புத்தாண்டு உங்களுக்கு அனைத்து வளங்களையும் நன்மைகளையும் தந்து மேலும் இன்பமாக வாழ வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க கிளிக்

RASI PALAN TODAY | இன்றைய ராசி பலன்
இன்றைய நல்ல நேரம்
மாத ராசி பலன்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
பல்லி விழும் பலன்கள்
கனவு பலன்கள்
rasi palan today

ASTRO SAKTHI

error: Content is protected !!