இன்றைய ராசி பலன்கள்: ஆகஸ்ட் 12, 2025 செவ்வாய்க்கிழமை | Today Rasi Palan
மேஷம் ராசி
மேஷ ராசி அன்பர்களே, இன்று தாங்கள் நினைத்த காரியம் தடைபட்டு பின்பு நடைபெறும். தேவையற்ற வீண் செலவுகள் மற்றும் அலைச்சல்கள் ஏற்படும். கணவன் மனைவி சண்டைகளை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத திடீர் பயணங்களால் உங்களுக்கு சோர்வு உண்டாகும். மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமாக இருக்கும்.
ரிஷபம் ராசி
ரிஷப ராசி அன்பர்களே, இன்றைய தினம் தடைபட்ட பண வரவுகள் மற்றும் தாங்கள் நினைத்த காரியங்கள் கைகூடும் நாள். உங்களது பேச்சுக்களில் உத்வேகமும் செயல்களில் முன்னேற்றமும் வெளிப்படும் நாள். உங்களது பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் லாபம் நிறைந்த நாள்.
மிதுனம் ராசி
மிதுன ராசி அன்பர்களே, இன்று புதிய பயணத்தை மேற்கொள்வீர்கள். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் ஏற்பட்டு புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் நிறைந்த நாள். பொறுமையை கடைப்பிடித்தால் இன்றைய தினம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.
கடகம் ராசி
கடக ராசி அன்பர்களே, தந்தை வழியில் முன்னேற்றம் உண்டு. கோவில்களுக்கு சென்று வருவீர்கள். புதிய பயணத்தை மேற்கொள்வீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் சூழல் இன்றைய தினத்தில் இருக்கும். அரசு துறை சார்ந்த விஷயங்கள் நன்மை பயக்கும். கடக ராசியினருக்கு இன்றைய தினம் தொழிலிலும் மற்றும் வேலையிலும் போட்டிகள் நிறைந்த நாள்.
சிம்மம் ராசி
சிம்ம ராசி அன்பர்களே, நண்பர்களிடத்தில் இன்று பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். உங்களது வாழ்க்கைத் துணைக்காக புதிய விஷயங்களை மேற்கொள்வீர்கள். இன்றைய தினத்தில் குடும்ப உறவுகள் இடத்தில் அனுசரித்து செல்வது சிறப்பு. குடும்பம் சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுப்பதில் பொறுமையை கையாள வேண்டும். இன்றைய தினத்தில் எதிலும் விவேகத்துடன் செயல்பட்டால் இன்றைய தினம் உங்களுக்கு நன்மையே.
கன்னி ராசி
கன்னி ராசி அன்பர்களே, இன்றைய தினத்தில் உங்களது வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நண்பர்கள் வழியிலும், சகோதரர்கள் வழியிலும் ஆதரவு கிடைக்கும் நாள். கன்னி ராசியினர் இன்றைய தினத்தில் புதிய பயணங்களை மேற்கொள்வார்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் செயல்பாடுகளில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும் நாள்.
துலாம் ராசி
துலாம் ராசி அன்பர்களே, திட்டமிட்ட பணிகள் முடிவுக்கு வந்து வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் நாள். இன்றைய தினத்தில் கடன் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். தாயாருடன் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் இன்றைய தினத்தில் முயற்சி செய்யலாம்.
விருச்சிகம் ராசி
விருச்சிகம் ராசி அன்பர்களே, பூர்வீகம் சம்பந்தப்பட்ட சொத்துகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட முடிவுகளை இன்றைய தினத்தில் எடுப்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும் நாள். விருச்சக ராசியினர் இன்றைய தினத்தில் தங்கள் விருப்பப்பட்டவர்களை சந்திக்கும் நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு ராசி
தனுசு ராசி அன்பர்களே, இன்றைய தினத்தில் வியாபார ரீதியாக புதிய முடிவுகளை எடுப்பீர்கள். கடந்த கால பிரச்சனைகளை நினைத்து இன்றைய தினத்தில் மனதை வருத்திக் கொண்டிருப்பீர்கள். பொருளாதாரத்தில் ஏற்றமும் இறக்கமும் ஏற்படும். இன்றைய தினத்தில் குழந்தைகளிடத்தில் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் நாளாக இந்த நாள் அமையும்.
மகரம் ராசி
மகர ராசி அன்பர்களே, தாய் வழியில் ஆதரவு கிடைக்க பெறும். குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் நிறைந்த நாள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும் நாளாக இந்த நாள் அமையும். மகர ராசியினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் நாளாக இன்றைய தினம் இருக்கும்.
கும்பம் ராசி
கும்ப ராசி அன்பர்களே, கும்ப ராசியினருக்கு இதுவரை இருந்த பொருளாதார தடைகள் நீங்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் ஏற்படும் நாளாக அமையும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறும் நாளாக இருக்கும். நட்பு வட்டாரத்தில் மகிழ்ச்சிகள் ஏற்படும். தொழிலிலும் முன்னேற்றம் நிறைந்த நாளாக இந்த நாள் அமையும்.
மீனம் ராசி
மீன ராசி அன்பர்களே, மீன ராசியினருக்கு இன்றைய தினத்தில் புதிய சிந்தனைகள் ஏற்பட்டு புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்றைய தினத்தில் உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. இன்றைய தினம் பயணங்கள் நிறைந்த தினமாக மீன ராசியினருக்கு அமையும். வியாபாரத்தில் முன்னேற்றம் நிறைந்த நாள். குழந்தைகளிடத்தில் கவனமாக பேசுவது நல்லது. நண்பர்களிடத்தில் வீண் விவாதங்கள் செய்யாதீர்கள்.
இதையும் படிக்கலாமே,
RASI PALAN TODAY | இன்றைய ராசி பலன் |
இன்றைய நல்ல நேரம் |
மாத ராசி பலன் |
வார ராசிபலன் |
சனி பெயர்ச்சி பலன்கள் |
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் |
பல்லி விழும் பலன்கள் |
கனவு பலன்கள் |