---Advertisement---

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026: துலாம்

RASI PALAN TODAY TAMIL
On: May 29, 2025 9:33 PM
Follow Us:
குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026
---Advertisement---

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026: துலாம்

குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம்

சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.

ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார்.

கார்த்திகை மாதம் 19ம் தேதி(05.12.2025) வெள்ளிக்கிழமை மாலை 05.25 மணிக்கு சூரிய உதயாதி 27.40 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் வக்ரகதியில் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு திரும்புகிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026

துணிச்சலும் நேர்மையும் உங்களின் பிறவிக் குணங்கள். அன்புக்கு அடிபணியும் நீங்கள், அடக்குமுறைக்குப் பணியாதவர்.உங்கள் ராசிக்கு (வாக்கியப்படி) வரும் மே-11 முதல், 9-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குரு பகவான். இந்த நிலை மிகப் பெரிய வரப்பிரசாதம் எனலாம். முகவரி இல்லாதவருக்கும் முகவரி கொடுக்கும் நிலை. எனலாம். இதுவரையிலும் பல விஷயங்களில் இருந்து ஒதுங்கியிருந்தவர்கள், இனி வெளிசத்துக்கு வருவார்கள். பிரச்னைகளால் சோர்ந்து போனவர்களுக்கு விடியல் பிறக்கும்.

எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். வளைந்துக் கொடுத்தால் வானளவு உயரலாம் என்பதை உணருவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தந்தையாருடன் இருந்த மனத் தாங்கல் நீங்கும். தந்தைவழி சொத்துக்கள் வந்து சேரும். குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவுகளுக்குத் தீர்வு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் கூடி வரும்.

எல்லா வகைகளிலும் செல்வாக்கு அதிகரிக் கும். குடும்பத்தில் பிரிந்திருந்தவர்கள், ஒன்று சேர்வார்கள். பணவரவு அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இதுவரையிலும் வாடகை வீட்டில் இருப்போர், சொந்த வீட்டில் குடியேறும் வாய்ப்பு உண்டாகும். மகனுக்குத் தள்ளிப்போய்க் கொண்டிருந்த திருமணம், இப்போது கூடி வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.

குரு பகவானின் பார்வை பலன்கள்

இவர்களின் ராசியைக் குரு பார்ப்பதால், சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். ஆரோக்கியம் மிகச் சிறப்பாக அமையும். தோற்றப்பொலிவு கூடும். தயக்கம் தடுமாற்றம் எல்லாம் நீங்கும். கையில் நாலு காசு தங்கும். வருங்காலத்தை மனதில் கொண்டு சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன் – மனைவிக்குள் மனம்விட்டுப்பேசுவீர்கள். 3-ம் இடத்தைக் குரு பகவான் பார்ப்பதால், சொத்துச் சேர்க்கை உண்டு. எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. பலருக்கும் நகை, ஆபரணங்கள் சேரும். செய்தொழிலில் இருந்து வந்த கடின நிலைகள் மாறும்.

5-ம் இடத்தைக் குரு பார்வையிடுவதால், வெகு காலமாகப் பிள்ளைப் பாக்கியத் துக்காகக் காத்திருந்த அன்பர் களுக்கு, பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் ஆதாயம், பெருமை வந்து சேரும். வட்டிக்கு வாங்கிய கடனை கொஞ்சம் கொஞ்சமாக தந்து முடிப்பீர்கள். எடுத்த காரியங்களில் முதல் முயற்சியிலேயே வெற்றி கிட்டும். வாகன வசதி பெருகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

வியாபாரத்தில், பெரிய முதலீடுகளைப் போட்டு போட்டியாளர்களைத் திகைக்கச் செய் வீர்கள். அனுபவசாலிகளைப் பணியில் அமர்த்துவீர்கள். நவீன யுக்திகளால் வாடிக்கை யாளர்களைக் கவர்வீர்கள். எலெக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ், கட்டட உதிரி பாகங்களால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களுடனான கருத்து மோதல்கள் நீங்கும்.

உத்தியோகத்தில், பதவியுயர்வு தேடி வரும். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். மேலதிகாரி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் தருவார். கணினித் துறையினருக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்குப் புது சலுகை கள் கிடைக்கும். கலைஞர்களே! பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும். தக்கபடி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026: மிதுனம்

பரிகாரம்: 

கும்பகோணத்தில் இருந்து சுமார் 11 கி.மீ. தூரத்தில் உள்ள தலம் திருப்புறம்பியம். சரித்திரப் பெருமை பெற்ற ஊர், ஜன்ம நட்சத்திர தினம் அல்லது செவ்வாய்க்கிழமைகளில், இங்கு அருளும் ஈஸ்வரரான சாட்சிநாதரையும், அம்பாள் கரும்படுசொல்லம்மையையும் தரிசித்து வஸ்திரம் சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள். அந்த அம்மையப்பனின் அருளால், சிக்கல்களும் சிரமங்களும் நீங்கும்; வாழ்வில் முன்னேற்றப் பாதை புலப்படும்.

Join WhatsApp Channel

Join Now

Join Facebook Page

Join Now
error: Content is protected !!