குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026:மேஷம்

rasi palan today

By ASTRO SIVA

Published on:

Facebook Page Join WhatsApp Channel
குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026:மேஷம்

குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம்

சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.

ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார்.

கார்த்திகை மாதம் 19ம் தேதி(05.12.2025) வெள்ளிக்கிழமை மாலை 05.25 மணிக்கு சூரிய உதயாதி 27.40 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் வக்ரகதியில் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு திரும்புகிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள்

கொள்கைப்பிடிப்பும் எல்லோருக்கும் உதவும் மனப் பான்மையும் கொண்டவர் நீங்கள். உங்கள் ராசிக்கு (வாக்கியப்படி) மே-11 முதல் 3-ம் இடத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார் குரு பகவான். தனது பார்வை அருளால் நல்ல மாற்றங்களைத் தரப்போகிறார்.

இதுவரையிலும் உங்களின் மனதில் இருந்த தயக்கம், சோர்வு எல்லாம் நீங்கி தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சமூகத்தில் செல்வாக்குக் கூடும். எனினும், குருபகவான் முயற்சி ஸ்தானத்தில் அடியெடுத்து வைப்பதால், நீங்கள் முன்னெடுக்கும் காரியங்களில் சிற்சில தடங்கல்கள் ஏற்படலாம். இளைய சகோதரர்கள் வகையில் அலைச்சல் இருக்கும். அவர்களோடு மனஸ்தாபமும் ஏற்படலாம்.

எந்தவொரு திட்டமாக இருந்தாலும், குடும்பக் காரியங்களாக இருந்தாலும் திட்டமிடலில் இரண்டாவதாக ஒரு யோசனையை வைத்துக் கொள்ளுங்கள். முதல் யோசனை சறுக்கினாலும், இரண்டாவது கைகொடுக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் வந்து நீங்கும். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது. யாரையும் அநாவசியமாக வீட்டிற்குள் அழைத்து வரவேண்டாம்.

குரு பகவான் பார்வை பலன்கள்

image

குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் சிறு சிறு சர்ச்சைகள் ஏற்பட்டாலும், சந்தோஷத்துக்குக் குறைவிருக்காது.கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் உற்றத் துணையாக விளங்குவதால், சுபிட்சம் கூடும். குடும்பச் சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். மறைந் திருந்த திறமைகள் வெளிப்படும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்.

குருபகவான் 9-ம் இடத்தைப் பார்ப்பதால், தந்தை வழியில் சொத்துக்கள் சேரும். தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி பாசம் கூடும். சிலருக்கு, விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழையகடன் பைசலாகும். பிள்ளை களின் பிடிவாதம் தளரும். மகனை, எதிர்பார்த்த கல்வி நிறுவனத்திலேயே படிக்க வைப்பீர்கள். மகளுக்கு உங்கள் வசதிக்கும், அந்தஸ்துக்கும் தகுந்த மணமகன் அமைவார்.

குருபகவான் லாபஸ்தானமாகிய 11-ம் இடத்தைப் பார்ப்பதால், சகல வகையிலும் லாபம் உண்டு. காரியத் தடைகள் விலகும். பிரபலங் களால் பாராட்டப்படுவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். சொத்துப் பிரச்னைகள் சுமுகமாக முடியும். இந்த ராசியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். மேலிடத்தை அனுசரித்துப் போகவும். வாகனத்தை இயக்கும் போது செல்போனில் பேச வேண்டாம்.

வியாபாரத்தில் திடீர் லாபங்கள் சேர்ந்து, உங்களை மகிழ்விக்கும். புதிய முயற்சிகளில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். எனினும், வருங்கால சந்தை நிலவரத்தைக் கவனத்தில் கொண்டு புது முதலீடு செய்யுங்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளைப் போராடி விற்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவு தேவை. கூட்டுத் தொழிலில் சில பிரச்னைகள் உண்டு. ஸ்டேஷனரி, ஹோட்டல், கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள்.

image 1

உத்தியோகத்தில் வேலைப்பளு உண்டு. சில பணிகளை ஒன்றுக்கு இரண்டு முறை அலைந்துதிரிந்து முடிக்கவேண்டியது வரும். சிலருக்கு, விரும்பத் தகாத இடமாற்றமும் வந்து சேரலாம். பொறுமையுடன் இருக்கவும்.எது நிகழ்ந்தாலும் முடிவில் உங்களுக்கு மிகப்பெரிய நன்மை அளிப்பதாகவே அமையும்.

பரிகாரம்:

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப் பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் வழியில், சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது ஞானமலை. வள்ளிதேவியுடன் முருகப்பெருமான் தங்கியிருந்த தலம் இது. அருணகிரிநாதருக்கு, தனது பாத தரிசனத்தை முருகன் காட்டியருளிய தலமும் இதுவே. ஏதேனும் ஒரு வியாழக்கிழமையில், இங்கு சென்று வழிபட்டு வாருங்கள்; நன்மைகள் நடக்கும்!

rasi palan today

ASTRO SIVA

Leave a Comment

error: Content is protected !!