---Advertisement---

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026: தனுசு

RASI PALAN TODAY TAMIL
On: May 30, 2025 8:57 PM
Follow Us:
குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026
---Advertisement---

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026: தனுசு

குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம்

சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.

ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார்.

கார்த்திகை மாதம் 19ம் தேதி(05.12.2025) வெள்ளிக்கிழமை மாலை 05.25 மணிக்கு சூரிய உதயாதி 27.40 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் வக்ரகதியில் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு திரும்புகிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026

துடிப்பான செயல்களுக்குச் சொந்தக்காரர் நீங்கள். மலர்ந்த முகத்தால் எல்லோரையும் வசப்படுத்தி, வழிநடத்துவதில் வல்லவர் நீங்கள். உங்கள் ராசிக்கு, வரும் மே-11 முதல் (வாக்கியப்படி) 7-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான்.

இதுவரையிலும் உங்கள் ராசி நாதனே 6-ம் இடத்தில் மறைந்து கிடந்தார். ஆகவே, உங்களுக்கு நீங்களே எதிராக மாறும் அளவுக்குச் சூழல் இருந்தது. உடன் இருந்தவர்கள், துரோகம் இழைத் திருப்பார்கள். அதேபோல், நீங்கள் சந்தித்த ஏமாற்றங்களும் அதிகம். இனி, இந்த நிலை மாறும். ஏழாம் இடத்தில் குரு வந்து அமர்வதால், உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். கணவன் -மனைவிக்கு இடையே மனக்கசுப்புகள் விலகும். மனம் திறந்து பேசுவீர்கள். புரிதல் அதிகமாகும்; அந்நியோன்யம் கூடும்.

உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். உங்களின் அறிவுரையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் இனி நல்லபடியாக நடக்கும். வங்கிக் கடனுதவி கந யுடன் சொந்த வீடு வாங்குவீர்கள். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். சொத்துப் பிரச்னை தீரும்.

குரு பகவானின் பார்வை பலன்கள்

குரு பகவான் பார்வை பலன்கள்

ராசியைக் குருபகவான் பார்ப்பதால் அழகு, இளமை கூடும். எதிலும் துல்லியமாக திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். மனதிலிருந்த குழப்பங்கள், சஞ்சலங்கள் அனைத்தும் விலகி, புது உற்சாகம் பிறக்கும்.

உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால், சமூகத்தில் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். கௌரவப் பதவிகள் தேடிவரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். ஏமாற்றங்கள், தாழ்வுமனப்பான்மையில் இருந்து விடுபடுவீர்கள். உங்களால் பயன் அடைந்தவர்கள், இப்போது உங்களுக்கு உதவ முன்வருவார்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள்; வீண் பழிகள் விலகும்.

11-ம் இடமாகிய லாபஸ்தானம் குருவின் பார்வை யை ப் பெறுவதால், தொட்ட காரியம் துலங்கும். மூத்த சகோதரரால் ஆதாயம் உண்டு. இளைய சகோதரர்களுடன் மனத்தாங்கல் நீங்கும். ஒருசிலருக்குப் பொன்-பொருள் சேர்க்கை நிகழும். விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சிலருக்கு, ஷேர் மார்க்கெட் மூலம் பண வரவு உண்டாகும். சேமிக்கத் தொடங்குவீர்கள்.

வியாபாரத்தில் புதுப் பாய்ச்சல் காட்டுவீர்கள். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். வருடப் பிற்பகுதியில் வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். ரியல் எஸ்டேட், உணவு விடுதி, வாகன உதிரி பாகங்களால் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பிரச்சனைகள் ஓயும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.

உத்தியோகத்தில், வேலைப்பளு சற்றுக் குறையும். உங்களின் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரியின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு, அவருடன் நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். நீங்கள் எதிர்பார்த்த பதவி சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

சிலருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கணினித் துறையினர் இழந்த சலுகையை மீண்டும் பெறுவார்கள். கலைஞர்களே ! நல்லதொரு நிறுவனத்தில் வாய்ப்பு கிடைக்கும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.

பரிகாரம்:

நீங்கள் பழநி முருகனைச் சரணடைந்தால், வாழ்வில் சந்தோஷம் பெருகும். ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமை அன்று, குடும்பத்துடன் சென்று பழநிக்குச் சென்று தண்டாயுதபாணியை தரிசித்து வழிபட்டு வாருங்கள். அத்துடன், அங்கே அருள்புரியும் போகர் பெருமானையும் வணங்கி வாருங்கள்; குருவருளும் திருவருளும் ஒருங்கே கிடைக்கும்; சுபிட்சம் உண்டாகும்

Join WhatsApp Channel

Join Now

Join Facebook Page

Join Now
error: Content is protected !!