---Advertisement---

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026: மீனம்

RASI PALAN TODAY TAMIL
On: May 30, 2025 9:11 PM
Follow Us:
குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026
---Advertisement---

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026: மீனம்

குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம்

சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.

ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார்.

கார்த்திகை மாதம் 19ம் தேதி(05.12.2025) வெள்ளிக்கிழமை மாலை 05.25 மணிக்கு சூரிய உதயாதி 27.40 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் வக்ரகதியில் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு திரும்புகிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026

அமைதியும் பொறுமையும் மிகுந்தவர் நீங்கள். எதிலும் நிதானமாகச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள், உங்கள் ராசிக்கு, வரும் மே-11 முதல் (வாக்கியப்படி) 4-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப் போகிறார் குருபசுவான்.

இதுவரையிலும் 3-ல் இருந்த படி பல விஷயங்களிலும் முடக்கி வைத்திருந்தார் குருபகவான். இப்போது அவர், நான்காம் ட்டில் அடியெடுத்து வைப்பதால், தடங்கல்கள் நீங்கும். செயலில் வேகம் பிறக்கும். சகல வகைகளிலும் புதிய தொடர்புகளும், அவற்றால் ஆதாயங்களும் உண்டாகும்.

அதேநேரம், மனதுக்குள் ஏதோ இனம்புரியாத வெறுமை சூழந்தது போன்று உணர்வீர்கள். சிலநேரங்களில் வாழ்வில் சலிப்பு ஏற்படலாம். செலவுகளும் தொடர்ந்து வரும். சில சவால்களை எதிர்கொள்ளும் நேரங்களில், ‘சமாளிக்க முடியுமா’ எனும் மலைப்பு உண்டாகும். தாயாருக்குச் சிறு சிறு ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகலாம். உங்களுக்கு சில கூடாபழக்கவழக்கங்கள் தொற்றிக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு. கவனமாக இருக்கவேண்டும்.

உறவினர்களிடம் விட்டுக்கொடுத்துப் போங்கள். காலில் அடிபடும். நீர், நெருப்பு, மின்சாரத்தைக் கவனமாகக் கையாளுங்கள். அலைச்சல் இருக்கும். சேமிப்புகள் கரையும்.

நட்பு வட்டாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்களைப் பற்றி எவர் எப்படியான விமர்சனங்களை முன்வைத்தாலும், பேசினாலும் அவற்றை எண்ணி கலங்கவேண்டாம். நீங்கள் உங்கள் மனசாட்சிப்படி நல்லவராக நடந்து கொண்டால் போதும். மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று எண்ணிச் செயல்படவேண்டாம். இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். சிறு சிறு விபத்துகள் உண்டாக வாய்ப்பு உண்டு. அதேபோல் வீடு-மனை வாங்குவதிலும் விற்பதிலும் கவனமாகச் செயல்படவேண்டும்.

குரு பகவானின் பார்வை பலன்கள்

குரு பகவான் பார்வை பலன்கள்

குருபகவான் 8-ம் இடத்தைப் பார்ப்பதால், பயணங்கள் உண்டு. அவற்றால் ஆதாயமும் ஏற்படும். எல்லாவகையிலும் செல்வாக்குஅதிகரிக்கும்.

குருபகவான் 10-ம் இடத்தைப் பார்ப்பதால், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. நீங்கள் எதிர்பார்த்த பதவி-சம்பள உயர்வு உரிய நேரத்தில் வந்து சேரும். சிலருக்கு வேறு நிறுவனங்களிலிருந்தும் புதிய வாய்ப்புகள் தேடிவரும்.

12-ம் இடத்தைக் குருபகவான் பார்ப்பதால், மறைமுகப் பணவரவு உண்டு. எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எல்லா வகை யிலும் வெற்றி அடையும் யோகம் கூடிவரும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் யோகா, தியானம் செய்யுங்கள். அரசியல்வாதிகள் ஆதாரமின்றி யாரையும் விமர்சிக்க வேண்டாம்.

வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். லாபம் குறையாது. வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த புதிய அணுகுமுறைகளைக் கையாளுங்கள். புதிய வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களைச் சொல்லவேண்டாம். கெமிக்கல், பர்னிச்சர் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் கொஞ்சம் முரண்படுவார்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். உங்களுக்கு எதிராகச் சிலர் குற்றச்சாட்டுகளை வைப்பார்கள், மேலதிகாரியுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். பணியில் திடீர் இடமாற்றம் உண்டு. எனினும் நிறைவில் உங்களுக்குச் சாதகமான நிலையே உருவாகும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்ப தால் சவால்களைச் சமாளிப்பீர்கள். கணினித் துறையினருக்கு வேறு நல்ல வாய்ப்புகள் அமையும். கலைத்துறையினரே ! புது வாய்ப்புகள் கிடைப்பதில் சிற்சில தடைகள் இருந்தாலும் முடிவு சாதகமாக அமையும்.

பரிகாரம்:

வியாழக்கிழமை அன்று, தஞ்சைக்கு அருகில் உள்ள தென்குடித்திட்டை தலத்துக்குச் சென்று அருள்மிகு வசிஷ்டேஸ்வரர்-உலகநாயகி அம்மையையும், குருபகவானை யும் மனதார வணங்கி வழிபட்டு வாருங்கள். மட்டுமன்றி, பிரதோஷ தினங்களில் அருகிலுள்ள சிவாலயத்தில் வில்வம் சமர்ப்பித்து ஈசனை வழிபட்டு வாருங்கள்; தடைகள் நீங்கி வெற்றிகள் கைகூடும்.

Join WhatsApp Channel

Join Now

Join Facebook Page

Join Now
error: Content is protected !!