---Advertisement---

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026: மகரம்

RASI PALAN TODAY TAMIL
On: May 30, 2025 9:04 PM
Follow Us:
குரு பெயர்ச்சி பலன்கள்
---Advertisement---

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026: மகரம்

குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம்

சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.

ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார்.

கார்த்திகை மாதம் 19ம் தேதி(05.12.2025) வெள்ளிக்கிழமை மாலை 05.25 மணிக்கு சூரிய உதயாதி 27.40 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் வக்ரகதியில் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு திரும்புகிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026

பொறுமையும் பொறுப்பான செயல்பாடுகளும் உங்களின் பலமாகும். சிரித்த முகத்தோடு சிரமங்களை எதிர்கொண்டு வெல்வதில் சமர்த்தர் நீங்கள். உங்கள் ராசிக்கு, வரும் மே-11 முதல் (வாக்கியப்படி) 6-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான்.

அலைச்சலும் வேலைச்சுமையும் உண்டு என்றாலும், குருவின் திருவருள் பார்வை உங்களுக்குப் பலவிதத்திலும் ஆதாயத்தை அளிப்பதாக அமையும்,

ஒருசிலர், உங்களை விட்டு ஒதுங்கிப் போவார்கள். வீண் வதந்திகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. நீங்கள் நேர்வழியில் சம்பாதித்தாலும், குறுக்குவழியில் சம்பாதித்ததாகச் சிலர் குறை கூறலாம். சின்னச் சின்ன பகையும் போதலும் ஏற்படும். கவனம் தேவை.

அதேபோல், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். அடிக்கடி தண்ணீர் குடிப்பது நல்லது. பழைய வழக்குகள் ஏதேனும் இருந்தால், அவை தொடர்பாக கவனம் செலுத்துவது அவசியம். வழக்கறிஞரை ஆலோசித்துச் செயல்படுங்கள்.

அதேபோல், பேச்சிலும் செயலிலும் நிதானம் அவசியம். நீங்கள் சொல்லாததைச் சொன்னதாகக் கூறி சிலர் பிரச்னை ஏற்படுத் தலாம். இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்கவும். சிறு சிறு வாகன விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதேபோல் வாகனம் பழுதுபட்டு, பயணம் தடைப்படவும் வாய்ப்பு உண்டு.

குரு பார்வை பலன்கள்

குரு பகவான் பார்வை பலன்கள்

குருபகவான் 2-ம் இடத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் சந்தோஷம் நிரம்பியிருக்கும். பல வகையிலும் பணவரவு உண்டு. எல்லா விஷயங்களிலும் வெற்றி உண்டு. பேச்சில் நிதானம் பிறக்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். கணவன்- மனைவிக்குள் இருந்த சந்தேகம் தீரும்; தாம்பத்தியம் இனிக்கும்.

10-ம் இடத்தைக் குருபகவான் பார்ப்பதால், உத்தியோகத்தில் அதிரடி முன்னேற்றம் உண்டு. மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வேலைச் சுமை உண்டு என்றாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும். கௌரவ பதவிகள் தேடி வரும். சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு கூடும்12-ம் இடத்தைக் குரு பகவான் பார்ப்பதால், வீடு வாங்குவது, கட்டுவது நல்லபடியே நிறைவேறும். அரைகுறையாக நின்றுபோன கட்டட பணிகளை முழு மூச்சுடன் முடிப்பீர்கள். கட்டட அனுமதி, வங்கிக்கடன் ஆகியவை தாமதமின்றி கிடைக்கும்.

தாய் வழிச் சொத்துகள் கிடைக்கும். வீண் செலவுகளைக் கட்டுப் படுத்துவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். தள்ளிப்போன உங்கள் மகளின் கல்யாணத்தை வி.ஐ.பிகள் முன்னிலையில் நடத்துவீர்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்க மாவார்கள்.

வியாபாரத்தில், அடுத்தவரை நம்பி அகலக் கால் வைக்கவேண்டாம். பெரிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். போட்டிகள் அதிகரிக்கும். உங்களின் கனிவான பேச்சால் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்.

இரும்பு, கெமிக்கல்,ரியல்எஸ்டேட் வகைகளால் ஆதாயம் உண்டு. புதிய துறையில் இறங்க வேண்டாம். பங்குதாரர்கள் எடுத்தெறிந்துப் பேசினாலும், ஆத்திரப்படாதீர்கள்.

உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பதவி – சம்பள உயர்வு தேடி வரும். வெளிநாட்டுத்தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். கணினித் துறையினர் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். கலைஞர்களே! அரசு பாராட்டும். வெளிநாட்டு நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.

பரிகாரம்:

நீங்கள், ஏதெனும் ஒரு வியாழக் கிழமை அன்று, குடும்பத்துடன் ஆலங்குடி திருத்தலத்துக்குச் சென்று, அங்கே அருளும் தட்சிணாமூர்த்தி பகவானுக்கு 24 தீபங்கள் ஏற்றிவைத்து வணங்குங்கள்.அத்துடன் ஆபத்சகாயேஸ்வரரையும், ஏலவார் குழலி அம்பாளையும் வணங்கி வழிபட்டு வாருங்கள். கோயில் அன்னதானப் பணிக்கு இயன்ற உதவியை வழங்குங்கள், கிரசு தோஷங்கள் விலகி, முன்னேற்றம் உண்டாகும்

Join WhatsApp Channel

Join Now

Join Facebook Page

Join Now
error: Content is protected !!