---Advertisement---

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026: கன்னி

RASI PALAN TODAY TAMIL
On: May 14, 2025 8:55 AM
Follow Us:
குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026
---Advertisement---

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026: கன்னி

குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம்

சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.

ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார்.

கார்த்திகை மாதம் 19ம் தேதி(05.12.2025) வெள்ளிக்கிழமை மாலை 05.25 மணிக்கு சூரிய உதயாதி 27.40 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் வக்ரகதியில் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு திரும்புகிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026

நேர்வழியில் நடப்பவர் நீங்கள்; எளியோருக்கு இரங்கும் குணசீலர். உங்கள் ராசிக்கு (வாக்கியப் படி) மே-11 முதல் 10-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான்.

பத்தில் குரு பதவிக்கு ஆபத்தா என்ற கவலை வேண்டாம். வேலை பார்க்கும் இடத்தில், கவனத்துடனும் நிதானத்துடனும் நடந்துகொண்டால் போதும். மற்றபடி எவருக்காகவும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். வங்கி லோன் தொடர்பாக எவருக்கும் பரிந்துரை கையொப்பம் போடவேண்டாம்.

வெளியிடங்களில், சமூக அமைப்புகளில் பதவிகள் தேடி வந்தால், யோசித்துச் செயல்படு வது நல்லது. கூடுமானவரை, தவிர்த்து விடுவது நல்லது. அதேபோல், கூட்டுத்தொழில் செய்வோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். அவ்வப்போது, தர்மசங்கடமான சூழ்நிலைக்கு ஆளாவீர்கள்.

உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். எந்த விஷயத்திலும் மற்றவர்களை நம்பாமல், நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.

உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். ஆகவே, பேச்சில் கவனம் தேவை. எவரிடமும் அதிகம் உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒருசிலருக்குத் தோல்வி மனப்பான்மையால் மன இறுக்கம் உண்டாகும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டால், இதுபோன்ற நிலைகளைத் தவிர்க்கலாம். ஆன்மிக விஷயங்களில் நாட்டம் செலுத்துங்கள்; விரக்தியும் வேதனையும் விலகும்.

குரு பகவானின் பார்வை பலன்கள்

குரு பகவான் பார்வை பலன்கள்

குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். வரவேண்டிய பணம் வரும். கொடுக்கல்-வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டு. எனினும் வீண் சந்தேகத்தைத் தவிர்த்துவிடுங்கள்குரு, சுக வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் வருத்தம் நீங்கும். அவரின் ஆரோக்கியம் மேம்படும். கை, கால், முதுகு வலியிலிருந்து தாயார் விடுபடுவார். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். புது வீட்டில் குடிபுகுவீர்கள். பழுதாகி யிருந்த வாகனத்தை மாற்றுவீர்கள். தாய்மாமன் வகையில் மனக் கசப்புகள் நீங்கும். சிலர், சொந்த வீடு வாங்க வாய்ப்புகள் உண்டு. வீடு-மனை வாங்குவதும் விற்பதும் லாபம் தரும்.

குரு பகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். வழக்குகள் இருப்பின், அவை உங்களுக்குச் சாதகமாகும். எனினும் பழைய ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்தி ருப்பது அவசியம்.

வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை அறிந்து கொள்முதல் செய்யவும். பழைய பாக்கிகள் எளிதில் வசூலாகும். சிலர், கடையை விரிவுபடுத்துவீர்கள். புதியவர்களின் தேவையற்ற கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம். கெமிக்கல், கமிஷன், எலெக்ட்ரிக்கல் மற்றும் துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில், பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பாராத லாபமும் கிடைக்கும்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு இருக்கும். ஓரளவு சம்பள உயர்வு உண்டு. தேவையின்றி விடுப்புகள் எடுக்க வேண்டாம். சக ஊழியர்களை அரவணைத்துப் போங்கள். மூத்த அதிகாரிகளைப் பற்றிக் குறை கூறாதீர்கள். கலைஞர்களே! விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

பரிகாரம்:

ராணிப்பேட்டையிலிருந்து பொன்னை செல்லும் வழியில், சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது வள்ளிமலை. இது, மனதுக்குச் சிக்காத மந்திரமலை என்பார்கள். ஒருமுறை குடும்பத்துடன் இங்கு சென்று, அபிஷேகத்துக்குத் தேன் வாங்கிக்கொடுத்து, முருகனையும் வள்ளியம்மையையும் வழிபட்டு வாருங்கள்; விருப்பங்கள் யாவும் நிறைவேறும்!

Join WhatsApp Channel

Join Now

Join Facebook Page

Join Now
error: Content is protected !!