---Advertisement---

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026: சிம்மம்

RASI PALAN TODAY TAMIL
On: May 14, 2025 8:46 AM
Follow Us:
குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026
---Advertisement---

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026: சிம்மம்

குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம்

சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.

ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார்.

கார்த்திகை மாதம் 19ம் தேதி(05.12.2025) வெள்ளிக்கிழமை மாலை 05.25 மணிக்கு சூரிய உதயாதி 27.40 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் வக்ரகதியில் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு திரும்புகிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026: மிதுனம்

உதவும் மனப்பான்மையும் சவாலான காரியங்களையும்’ எளிதில் செய்து முடிக்கும் வல்லபையும் கொண்டவர் நீங்கள்.

உங்கள் ராசிக்கு (வாக்கியப் படி) மே-11 முதல் 11-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குரு பகவான். இதுவரையிலும் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போன்று ஒருவித அவஸ்தை நிலையில் இருந்தீர்கள். பிரபலங்களின் அறிமுகம் இருந்தும், அவர்களுடைய நட்பைப் பயன்படுத்த இயலாமல் தவித்தீர்கள். கையில் தேவையான அளவு காக-பணம் இருந்தும் நிம்மதி இல்லாமல் தவித்தீர்கள். இனி, இந்த நிலையெல்லாம் மாறும். குரு பகவான் லாபஸ்தானத்தில் வந்து அமர்வதால், சகல விஷயங்களிலும் நன்மை நடக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். பார்த்தும் பார்க்காதது போன்று, விலகிச் சென்ற சொந்தபந்தங்கள் எல்லாம் வலிய வந்து உறவாடுவார்கள்.

வெளியிடங்களில் முதல் மரியாதை கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதர, சகோதரிகள் வகையில் உதவிகள் கிடைக்கும். குறிப்பாக மூத்த சகோதரர் வகையில் ஆதாயம் உண்டு. அரசுக் காரியங்கள், நினைத்தபடி சீக்கிரம் நிறைவேறும். குடும்பத்தில் கூச்சல் குழப்பங்கள் நீங்கி சந்தோஷம் பெருகும். கணவன்-மனைவிக்கு இடையே அந்நியோன்யம் பிறக்கும். சகோதரிக்குத் திருமணம் சீரும் சிறப்புமாக நடந்து முடியும்.

குரு பகவானின் பார்வை பலன்கள்

குரு பகவான் பார்வை பலன்கள்

உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் இளைய சகோதரர் வகையில் இருந்த கசப்பு உணர்வு நீங்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உங்களின் முன்னேற்றம் பலரையும் வியக்க வைக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். வீட்டில் சந்தோஷம் நிறைந்திருக்கும். சிலருக்கு, நகை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

குரு பகவான் ஐந்தாம் வீட்டைப் பார்ப்ப தால், சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். தடைகளும் சிரமங்களும் நீங்கிபிள்ளைகளுக்குத் திருமணம் சிறப்பாக முடியும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தந்தை வழிச் சொத்துக்களைக் கேட்டு வாங்குவீர்கள்.

உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைக் குரு பார்ப்பதால் இதுவரை உங்களுக்குள் இருந்து வந்த சோர்வு, விரக்தி விலகும். மனத்தில் புது தெம்பு பிறக்கும். கடினமான வேலையைக்கூட இனி எளிதாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். எனினும் இயன்றளவுக்குப் பணத்தைச் சேமிக்கப் பாருங்கள். கணவன் – மனைவிக்கு இடையேயான சிக்கல்கள் நீங்கும். இருவருக்கும் பரஸ்பரம் ஒற்றுமை ஏற்படும்.

மற்றபடி, சொந்தபந்தங்களின் வருகையால் வீடு களை கட்டும். குலதெய்வப் பிரார்த்த னைகளை நிறைவேற்றுவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பெரிய பதவி களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீடு, மனை வாங்கும் யோகம் கைகூடும்.

வியாபாரத்தில், புதிய முதலீடுகள் செய்வீர் கள். கடையை விசாலமான இடத்திற்கு மாற்றுவீர்கள். டிசம்பர் மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாடிக்கையாளர்களைக் கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உணவு, இரும்பு, புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களுடனான மனத் தாங்கல் விலகும்.

உத்தியோகத்தில் உங்களை உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். தள்ளிப்போன பதவியுயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். தலைமைப் பொறுப்பு தேடி வரும், வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து 4 அதிக சம்பளத்துடன் கூடிய அழைப்பு வரும்.

பரிகாரம்:

உத்திரமேரூரிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் கீழரோடு வழியே பயணித்தால், சுமார்5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்புலிவனம். இங்குள்ள வியாக்ரபுரீஸ்வார் ஆலயத்தில் அருளும் சிம்ம தட்சிணாமூர்த்தியை, வியாழக் கிழமைகளில் தரிசித்து, கொண்டைக் கடலைச் கண்டல் சமர்ப்பித்து வணங்கி வாருங்கள்; நீங்கள் நினைத்தது நிறைவேறும்.

Join WhatsApp Channel

Join Now

Join Facebook Page

Join Now
error: Content is protected !!