---Advertisement---

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026: மிதுனம்

RASI PALAN TODAY TAMIL
On: May 13, 2025 9:37 AM
Follow Us:
குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026: மிதுனம்
---Advertisement---

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026: மிதுனம்

குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம்

சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.

ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார்.

கார்த்திகை மாதம் 19ம் தேதி(05.12.2025) வெள்ளிக்கிழமை மாலை 05.25 மணிக்கு சூரிய உதயாதி 27.40 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் வக்ரகதியில் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு திரும்புகிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026

சோதனைகளையும் சாதனை களாக மாற்றி முன்னேறத் துடிப்பவர் நீங்கள்.(வாக்கியப்படி) வரும் மே-11 முதல், முதல்,உங்கள் ராசியில் வந்து அமர்ந்து, பலன் தரப்போகிறார் குருபகவான்.

அடடா!ஜன்ம குருவாயிற்றே… என்று பதற்றம் அடையவேண்டாம். குருபகவானின் பார்வை பலன்கள் ஓரளவுக்கு உங்களுக்குச் சாதக மாகவே அமையும். பூர்விகச் சொத்து, பிள்ளைகள் கல்யாணம், ஓரளவு பணவரவு என்று நன்மை கள் நடக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. தள்ளிப்போன வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். பிறரிடம் கொடுத்து ஏமாந்த பணம் கைக்கு வரும். அதேநேரம், பொறுப்புகளும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். அவசரப்பட்டு வாக்குறுதி அளிக்கவேண்டாம்.

ஜன்ம குரு என்பதால், வீட்டில் கொஞ்சம் சிரமங்கள் ஏற்படும். தாயா, தாரமா எனும் போராட்ட நிலையில் சிக்கும் சூழல் அவ்வப்போது உண்டு. எனினும் சமாளித்து மீள்வீர்கள். சில தருணங்களில் உங்களைக் கருத்துகளை வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலை, மனதுக்குள் சலிப்பு, சோர்வு, முன்கோபம் வந்து நீங்கும். ஆரோக்கியத்தில் அலட்சியம் கூடாது; நிறைய தண்ணீர் அருந்துவது அவசியம்.

குரு பகவான் பார்வை பலன்கள்

குரு பகவான் பார்வை பலன்கள்

குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்ப்பதால், குழந்தை வேண்டி காத்திருக்கும் அன்பர்களுக்குக் குழந்தைப் பேறு வாய்க்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் உண்டு. பூர்விகச் சொத்துக்கள் வந்து சேரும். அதன் மூலம் ஆதாயமும் கிடைக்க வாய்ப்பு உண்டு. பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். சிலருக்கு வீடு வாங்கும் அமைப்பு உண்டு. மகளுக்குக் கல்யாணம் கூடிவரும்.

குரு பகவான் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் கணவன்-மனைவிக்குள் ஓரளவு நெருக்கம் உண்டு. அதேநேரம் சிற்சில தருணங்களில் நெருக்கடியும் உண்டு. உங்களின் மறைந்து கிடைக்கும் திறமைகள் வெளிப்பட வாய்ப்பு உண்டு. வீட்டில் தாமதமான சுபநிகழ்ச்சிகள் இனி கோலாகலமாக நடக்கும்.உங்கள் ராசிக்குப் பாக்கிய வீடான 9-ம் வீட்டில் குருவின் பார்வை விழுவதால், எதிர்பார்க்கும் அளவிற்கு பணம் வராவிட்டாலும் கடைசி நேரத்தில் ஓரளவு கிடைக் கும். செலவுகளும் உண்டு. அரசியல்வாதிகள் கோஷ்டிப் பூசலில் சிக்காமல் இருப்பது நல்லது. திடீரென்று புதிய பதவியில் அமர்த்தப்படுவீர்கள். அப்படியான வாய்ப்புகளைத் தக்க முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். வீண் விமர்சனங்கள் பின்னடைவை ஏற்படுத்தலாம். ஆகவே, பேச்சில் கவனம் தேவை.

மற்றபடி, எதிர்பார்த்த விஷயங்களில் முன்னேற்றம் உண்டு. வெளியூர், வெளி நாடுகளில் இருக்கும் அன்பர்கள் மூலம் சுபச் சேதி கிடைக்கும். எந்தவொரு காரியத்திலும் திட்டமிட்டு செயலாற்றினால், வீண் நஷ்டங் களைத் தவிர்க்கலாம். எதன்பொருட்டும் ‘தாமதம் ஆகிறதே… தடங்கல் நேர்ந்துவிட்டதே… என்று வருந்த வேண்டாம். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று பொறுமை காத்தால், நன்மை விளையும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சந்தை நுணுக்கங்களை சுற்றுக்கொண்டு பெரிய முதலீடு செய்யுங்கள். வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். புதிய துறையில் முதலீடு செய்ய வேண்டாம். கெமிக்கல், ஹோட்டல், துணி வகைகளால் லாபம் உண்டு, பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.

உத்தியோகத்தில் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சக ஊழியர்களைப் பகைக்க வேண் டாம். பணி நிமித்தமான தேர்வுகளில் வெற்றி பெறுவதன் மூலம் பதவி, சம்பளம் உயரும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் நினைத்ததை முடிப்பீர்கள். கலைஞர்கள் விமர்சனங்களைப் புறந்தள்ளவும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026: மிதுனம்

பரிகாரம்:

புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி (காரையூர் வழி) செல்லும் வழியில், சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ளது குமரமலை. சஷ்டி தினங்களில் இங்குள்ள குமரனை ஆராதித்து, விபூதிப் பிரசாதம் பெற்று வந்து, நாள்தோறும் அணிந்துகொள்ளுங்கள். சங்கடங்கள் எல்லாம் காணாமல்போகும்

Join WhatsApp Channel

Join Now

Join Facebook Page

Join Now
error: Content is protected !!