New Year Rasi Palan 2025 in Tamil Meenam | மீனம் ராசி ஆங்கில புத்தாண்டு பலன்கள்

rasi palan today

By ASTRO SAKTHI

Published on:

meenam rasi palan today மீனம் ராசி பலன் இன்று

New Year Rasi Palan 2025 in Tamil Meenam | மீனம் ராசி ஆங்கில புத்தாண்டு பலன்கள்

வெளியே சொல்ல முடியாத அளவுக்கு மனதில் கஷ்டம் இருந்தாலும்  உதட்டில் எப்போதும் ஒரு சிறு புன்னகையை கொண்டு மன கஷ்டங்களை மறைபவர்கள் நீங்கள் தான். மனதில் உள்ளதை வார்த்தையால் சொல்லமுடியாமல் தவிப்பீர்கள். சொல்ல நினைத்து விட்டால் அனைத்தையும் சொல்லி கொட்டி விடுவீர்கள். இது போன்ற பண்பு உள்ளவர்கள் நீங்கள் தான். இதனால் தான் உங்களுக்கு நிரந்தரமாக சொல்லும் படியாக நண்பர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். பயப்படும் அளவுக்கு எதிரிகளும் இருக்க மாட்டார்கள்.

கடந்த 2024 ஆம் ஆண்டு வரை சொல்லும்படியாக எதுவும் நடக்கவில்லை. உடலில் பல பிரச்சினைகள் காரணமாக மருத்துவமனைக்கு அலைந்து கொண்டும் மாத்திரைகள் அதிக அளவில் கொண்டும் வந்திருப்பீர்கள். 

உடலில் மாற்றி மாற்றி வலி உடல் உபாதைகள் காரணமாக பலவிதமான மாத்திரைகளை உட்கொண்டு பலவிதமான மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தியும் எந்த ஒரு பலனும் இல்லாமல் இருந்திருக்கும்.

உங்கள் ராசியின் படி விரையச் சனி இருப்பதால் கைக்கு வரும் பணம் எளிதில் செலவடையும். ஏதேனும் பொருள் வாங்குவதற்கு குறிப்பிட்ட பணத்தை மட்டுமே பட்ஜெட் ஆக போட்டு வாங்க சென்றாலும் கூட,  உங்களையும் மீறி பணம் அதிக அளவில் செலவாகும். 2025 ஆம் ஆண்டு உங்கள் ராசியில் இருந்து பத்தாவது ராசியில் பிறந்துள்ளதால், குடும்பத்தில் உங்களுக்கும் அல்லது குடும்பத்தில் வேலை பார்க்கும் யாரேனும் ஒரு நபர்களுக்கும் வருமானம் அதிக அளவில் வரும். இதுவரை ராகு உங்களை படாத பாடு படுத்திருந்திருக்கும். வருகின்ற மே மாதம் ராகு கேது பெயர்ச்சியின் போது, ராகு உங்கள் ராசியில் இருந்து விலகுகிறார். மே மாதம்  நடக்க இருக்கும் ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு உங்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தேவையில்லாமல் ஏற்படும் சில கோபங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. 

கவனம் தேவை: உங்கள் ராசியில் பனிரெண்டாவது வீட்டில் தற்பொழுது ஏழரைச் சனியை  நடத்தி கொண்டிருக்கும் சனி பகவான் மார்ச் மாதத்தில் உங்கள் ராசியிலேயே வந்து உட்கார போகிறார். அதுவும் ஜென்ம சனியாக வந்து உட்கார போகிறார். அதனால் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் இருக்க வேண்டும். முன்பின் தெரியாதவர்களின் விஷயத்தில் எதுவும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் தலையிட கூடாது. இரவு நேரங்களில் சரியான உறக்கம் வேண்டும். சரியான இடைவெளியில் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு  பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. 

மே மாதம் நடக்கக்கூடிய ராகு கேது பெயர்ச்சி  2025 ஆம் ஆண்டு உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. உங்கள் ராசிநாதரான குரு பகவான் மூன்றாம் இடத்தில் இருப்பதால், நீங்கள் செய்யும் பல விஷயங்கள் தடங்கல் ஆகவே அமைந்திருக்கும். நீங்கள் எடுக்கும் பொது முயற்சிகள் அனைத்தும் பல தடங்கல்களை சந்தித்திருக்கும். 

மே 14ஆம் தேதிக்கு பிறகு குரு பகவான் உங்கள் ராசியில் நான்காம் வீட்டிற்கு செல்வதால் அனைத்து வழியிலும் வெற்றியை மட்டும் காண்பீர்கள். வெற்றி அடைவதற்கு பல தடங்கள் வந்தாலும் இம்முறை வெற்றி  பெற்றே தீர்வீர்கள். 

வியாபாரம்: 2025 ஆம் ஆண்டில் நீங்கள் செய்யும் வியாபாரம் நல்லபடியாக அமையும். புது முயற்சிகள் உங்கள் வியாபாரத்திற்கு வெற்றியைத் தரும்.  தொழில் செய்வதற்கு புதிய கடை  அல்லது உங்கள் பழைய கடையை புதுப்பிப்பது போன்ற சுப செயல்கள் உண்டாகும். புது வேலையாட்கள் நம்பிக்கை கூறியவர்களாக உங்களுக்கு வருவார்கள். அனைத்து  விதத்திலும் வெற்றி உங்களை  வந்து சேரும். 

வேலையில் அல்லது நீங்கள் இருக்கும் பணி இடத்தில் ஒரு தலைமை பொறுப்பாளர் உங்களுக்கு சாதகமாகவும் இன்னொரு தலைமை பொறுப்பாளர் உங்களுக்கு எதிராகவும் இருப்பார்கள். இதில் நல்லதே அனுபவிக்கலாமா அல்லது பயப்படுவதா என்பது தெரியாமல் குழம்பி இருப்பீர்கள். 

திருமணம்: கணவன் மனைவிக்குள் இருந்த தேவையில்லாத சச்சரவுகள் நீங்கும். ஒருவருக்கு மேல் ஒருவர் வைத்திருந்த பாசம் வெளிப்படும். கணவன் மனைவிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். திருமணம் ஆகாத ஆண் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடிவரும். 

தரிசனம்: 2025  ஆம் ஆண்டு சிறந்த மகிழ்ச்சி தரும் மற்றும் ஆரோக்கியமான ஆண்டாக அமைவதற்கு ஸ்ரீ வராகி அம்மனை நாள்தோறும் வணங்கி வாருங்கள். 

தானம்: அன்னதானம் கோயில்களுக்கோ அல்லது நீங்களே அன்னதானம் செய்ய  நினைத்தாலோ  அதில் பச்சரிசியை கலைந்து தானமாக கொடுக்கலாம். அல்லது வெறும் பச்சரிசியையும் தானமாக கொடுத்து வரலாம். வாய் பேச  முடியாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உங்களால் முடிந்த சிறு உதவிகளை செய்வதன் மூலம் அவர்கள் பெரும்  சிறிய பயன்  உங்கள் வாழ்க்கையை மாற்றும் பெரிய பாதையாக அமையும். 2025 ஆம் ஆண்டு வெற்றி ஆண்டாக அமைவதற்கு வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க கிளிக்

RASI PALAN TODAY | இன்றைய ராசி பலன்
இன்றைய நல்ல நேரம்
மாத ராசி பலன்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
பல்லி விழும் பலன்கள்
கனவு பலன்கள்
rasi palan today

ASTRO SAKTHI

error: Content is protected !!