New Year Rasi Palan 2025 in Tamil Mithunam | மிதுனம் ராசி ஆங்கில புத்தாண்டு பலன்கள்

rasi palan today

By ASTRO SAKTHI

Published on:

mithuna rasi palan today மிதுனம் ராசி பலன் இன்று

New Year Rasi Palan 2025 in Tamil Mithunam | மிதுனம் ராசி ஆங்கில புத்தாண்டு பலன்கள்

 கடந்த 2024 ஆம் ஆண்டு  உங்களுக்கு ஒரு அரை குறையான ஆண்டாக அமைந்திருக்கும். எந்த வேலை எடுத்தாலும் முழுமையாக முடிக்க முடியாது, உங்களிடம் அதிர்ஷ்டம் வருவது போல் வந்து முழுமையாக வந்து சேராமல் பாதியில் திரும்பிவிடும். தெளிவான ஒரு வேலையை செய்ய மீண்டும் அதை முடிக்க முடியாமல் தள்ளிக் கொண்டே போய்க்கொண்டிருந்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு ஆண்டாக தான் கடந்த 2024 ஆம் ஆண்டு இருந்திருக்கும். சாதாரணமாகவே மிதுன ராசிக்காரர்கள்  உதவி செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள்.  உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் மட்டுமின்றி  யார் என்று தெரியாதவர்களுக்கு கூட ஏதேனும் பிரச்சனை என்றாலும் ஏதேனும் உதவி தேவைப்பட்டாலும் ஓடோடி சென்று செய்வீர்கள். அடுத்தவர்களின் தேவையை நீங்கள் நிறைவேற்றி வைப்பீர்கள்.ஆனால் உங்களுக்கு தேவையானவற்றை செய்து கொள்ள மாட்டீர்கள். இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகவும் சாதகமான ஒரு ஆண்டாக அமைந்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு பாதியில் அரைகுறையுடன் நின்ற பல வேலைகள் இந்த 2025 ஆம் ஆண்டு முழுமையாக நிறைவடையும். உங்கள் ராசியில் இருந்து ஏழாவது ராசியான தனுசு ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால், அனைத்து விஷயத்திலும் வெற்றி மட்டுமே பெறக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகிறது. வீடு, கடை அலுவலகம் போன்ற ஏதேனும் ஒன்றை வாங்குவதற்கு பத்திரப்பதிவு செய்து இருந்தாலும் அந்த இடத்தில் உங்களின் தொழிலை தொடங்க முடியாமல் பல தடங்கல்கள் கடந்த 2024 ஆம் ஆண்டு இருந்திருக்கும். ஆனால் 2025 ஆம் ஆண்டில் இது போன்ற அனைத்து சிக்கல்களும் பிரச்சனைகளும் நீங்கி மகிழ்ச்சியாக  வாழ்வதற்கான ஆண்டாக அமைந்துள்ளது

வியாபாரம்:  வருகின்ற மார்ச் 29  சனி பகவான் உங்கள் ராசியில்  பத்தாம் இடத்தில் வந்து உட்காருவதால் புதிய தொழில் தொடங்குவதற்கான சாதகம் காணப்படுகிறது. அல்லது இருக்கின்ற வேளையில் உயர்பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது. முன் இருந்ததை விட இனி பணவரவு சற்று கூடுதலாக இருப்பதற்கான சாதகம் உங்கள் ராசியில் உள்ளது. வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் சாதகமாக உள்ளது. இருக்கின்ற வேளையில் பதவி உயர்வு, வருமான உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது. 

ஆரோக்கியத்தில் கவனம்: 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் வரக்கூடிய ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு சாதகமாக உள்ளது. அதே சமயம் அதே மே மாதத்தில் வரக்கூடிய குரு பெயர்ச்சியால், உங்கள் ஆரோக்கியத்தில் அதிக அளவு கவனம் செலுத்த வேண்டும்.  தாயாருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் ஆரோக்கியத்திலும் அதிகளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும். உடல் அதிக அளவு வெப்பமாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதனால் தண்ணீர் அதிக அளவில் குடித்து ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

திருமணம்: ஏற்கனவே திருமணம் ஆன கணவன் மனைவிக்குள் சிறு சிறு சண்டைகளும் குடும்பத்திற்கு ஏதேனும் பிரச்சனைகளும் வருவதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது.கணவன் மனைவி இருவருள் யாரேனும் ஒருவர் அனுசரித்து விட்டு கொடுத்து நடந்து கொண்டால் வாழ்க்கை சுபிக்க்ஷமாக இருக்கும்.

தரிசனம்: 2025 ஆம் ஆண்டு ஒரு சிறந்த ஆண்டாக உங்களுக்கு அமைவதற்கு நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன்.

தானம்: ஏழை எளிய மக்களுக்கு அல்லது நோய்க்கு மருந்து வாங்க  பணம் இல்லாத ஏழை நோயாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து வாருங்கள். மிதுன ராசிக்காரர்கள் நீங்கள் பச்சை பயிரை தானமாக கொடுப்பதன் மூலம் பல நன்மைகளை அடையலாம்.இந்த 2025 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாகும். நினைத்த காரியங்கள் வெற்றி பெரும் ஆண்டாக உங்களுக்கு அமைவதற்கு வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க கிளிக்

RASI PALAN TODAY | இன்றைய ராசி பலன்
இன்றைய நல்ல நேரம்
மாத ராசி பலன்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
பல்லி விழும் பலன்கள்
கனவு பலன்கள்
rasi palan today

ASTRO SAKTHI

error: Content is protected !!