சனி பெயர்ச்சி பலன்கள் 2025: விருச்சிக ராசி
(விசாகம் 4ம் பாதம்,அனுஷம் ,கேட்டை )
சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025
இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

சனி பகவான் வரும் மார்ச் 29-ம் தேதி முதல், உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திலிருந்து பெயர்ச்சியாகி 5-ம் இடத்துக்கு வருகிறார். ஓரளவு பணவரவு உண்டாகும். குடும்பத்தினருடன் அமர்ந்து சிரித்துப் பேசி மகிழக் கூடிய இனிய நிலை உருவாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்சனை முடிவுக்கு வரும். எனினும் எல்லா விஷயங்களிலும் சற்றுக் கவனத்துடன் இருப்பது நல்லது.
இந்த வருடம் குருப்பெயர்ச்சியும் ராகு-கேது பெயர்ச்சியும் நிகழவுள்ளன. இந்த கோள்களின் சாரங்களால் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. குறிப்பாக கல்லூரி மாணவ மாணவிகள் கல்வியிலும், வேலைக்குச் செல்வோர் பணியிலும் மிகவும் கவனமாக இருங்கள். எக்காரணம் கொண்டும் வேறு பணிக்குச் செல்லவேண்டாம். சுபச்செலவுகளுக்காக கடன் வாங்கினாலும் தகுதிக்குமேல் அதிகமாகக் கடன் வாங்கக் கூடாது. பெண்கள் சமையல் பணிகளில் கவனத்துடன் செயல்படுங்கள்.
மற்றபடி, 5-ல் நிற்கும் சனிபகவான் தரும் பலாபலன்களைப் பார்த்தோமானால்… வீட்டைக் கட்டி முடித்து கிரகப் பிரவேசம் கோலாகலமச் செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் சச்சரவுகள் விலகும்; சந்தோஷம் பெருகும். பிள்ளை வரம் எதிர்பார்க்கும் அன்பர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். என்றாலும் கர்ப்பிணி கள் தொலை தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
சனிபகவானின் பார்வை பலன்கள்:
சனிபகவான் உங்களின் 2-ம்வீட்டைப்பார்ப்பதால் இடம்பொருள் ஏவல் அறிந்து பேசுவது நல்லது. கண்ணைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். சிலநேரங்களில் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் போகக்கூடும்.
சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்கு கை, கால் வலி, மரத்துப் போகுதல், மறதி வரக்கூடும். சனிபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால், நெடுநாள்களாக வரமாலிருந்த பணமெல்லாம் இனி கைக்கு வரும்.
மற்றபடி, பிள்ளைகளின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்புக் கொடுங்கள். சில நேரங்களில் உங்கள் உள்மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். யோகா, தியானம் மூலம் சரி செய்து கொள்ளுங்கள் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் விலகும் புதிய சொத்து வாங்குவீர்கள் வாகன வசதி பெருகும்.
இல்லத்தரசிகளே! குடும்பத்தில் உங்கள் கை ஒங்கும். கணவர் உங்களின் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார். மாமியார், மாம னார் உங்களைப் பெருமை பேசுவார்கள். அலுவலகம் செல்லும் பெண்களே ! வேலைச்சுமை. மன உளைச்சலிலிருந்து விடுபடுவீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. எனினும் அதைக் கையாள்வதில் ஜாக்கிரதையாக இருக்கவும்.
வியாபாரிகளே, பற்று வரவு உயரும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தர்களே, வேலைப்பளு குறையும். உங்களின் திறமையைக் கண்டு அதிகாரிகள் வியப்பார்கள்.

விசாகம் 4ம் பாதம்:சனி பெயர்ச்சி பலன்கள்
எத்தனை தடை வந்தாலும் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் பின்வாங்க மாட்டீர்கள். எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும்.பழைய பாக்கிகள் வசூலாகும்.
அனுஷம்:சனி பெயர்ச்சி பலன்கள்
தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன்,மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள் – நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். எடுத்த காரியங்களில்சாதகமான பலன் கிடைக்கும்.
கேட்டை:சனி பெயர்ச்சி பலன்கள்
எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவீர்கள். சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். வீண்,வறட்டு கௌரவத்துக்காக சேமிப்புகளை கரைத்துக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குமளவுக்குப் பிரபலமாவார்கள். நல்ல வாய்ப்புகள் வரும். உங்கள் முன்னேற்றத்திற்கு பாதை வகுக்கும் காலமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.
பரிகாரங்கள்:
ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் உள்ள குப்த கங்கை தீர்த்ததில் நீராடி, அங்குள்ள சகல தெய்வங்களையும் வணங்க வேண்டும். சிருங்கேரி சாரதாதேவியைத் தரிசித்து வாருங்கள்.
துங்கபத்ரா படித்துறையில் உள்ள மீன்களுக்குப் பொரி இடுங்கள்.
திங்கள்கிழமை தோறும் உங்கள் அருகில் உள்ள ஈசனுக்கு வில்வார்ச்சனை செய்துவர, துன்பங்கள் விலகும்; கிரக தோஷங்கள் தீரும்
மேலும் படிக்க கிளிக்