New Year Rasi Palan 2025 in Tamil Viruchigam | விருச்சிகம் ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
யார் என்ன ஒரு குற்றம் செய்தாலும் அதனை தவறாமல் மறக்காமல் சுட்டிக் காட்டுவது நீங்கள் தான். உண்மையாக உழைப்பதை ஒருவரின் தகுதி என்பது உங்களின் ஒரு வாக்கியமாக இருந்திருக்கும். முன் கோபம் அதிகம் கொண்டவர்களாக இருப்பவர்களும் நீங்கள் தான். அடுத்தவர்களை குறை சொல்வது, உட்கார்ந்து சாப்பிடுவது போன்றவை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். அதிகம் கோபம் கொள்வதாக பலர் உங்களிடம் உங்களை பற்றி குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் படும் கோபம் தேவையற்றதாக இருக்காது. ஒருவித அக்கறையும் காரணமாகவே நீங்கள் கோபமாக பேசுகிறீர்கள். உங்களிடம் பேசிப் பழகுபவர்கள் உங்களைப் பற்றி புரிந்து கொள்வதற்கு சில நாட்களே தேவைப்படும். உடனடியாக புரிந்து கொள்வதற்கான பண்பு அவர்களிடம் இருக்காது.
2025 ஆம் ஆண்டு உங்கள் ராசியில் இருந்து இரண்டாம் வீட்டில் பிறந்துள்ளது. இந்த 2025 ஆம் ஆண்டில் உங்களுக்கு பல நன்மை தரும் ஒரு ஆண்டாக உள்ளது. உடல் ஆரோக்கியம், முக அழகு போன்றவை கூடிக் கொண்டே போகும். கணவன் மனைவி உறவுகளுக்கு இடையே உண்டான தேவையில்லாத வாக்கு வாதங்கள் நீங்கும். கணவன் மனைவிகளுக்கிடையே உண்டான பிரச்சனை விலக ஆரம்பிக்கும்.
சுப செலவு: அதிக அளவில் பணம் வரவு இருந்திருந்தாலும் அதனை கொஞ்சமா எடுத்து வைத்து சேமிக்க முடியாத ஒரு சூழ்நிலை இருந்திருக்கும். இவை அனைத்தும் நீங்கி 2025 ஆம் ஆண்டு பெரிய அளவில் இல்லாமல் இருந்தாலும் சிறிய சேமிப்பையாவது சேர்த்து வைப்பதற்கான சூழ்நிலை காணப்படுகிறது. வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்த வீடு வாங்குவதற்கோ அல்லது சொந்த வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவதற்கு காலம் கைகூடும்.. அல்லது ஏற்கனவே வீடு கட்ட தொடங்கி அவை முழுமையாக முடிக்க முடியாமல் பாதியிலேயே நிற்கிறது என்று வருத்தம் கொண்டிருப்பீர்கள். 2025 ஆம் ஆண்டு இது போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு நன்மை உண்டாகுவதால் பாதியில் வீடு கட்டி கொண்டிருப்பார்கள்…முழு வீட்டையும் கட்டி குடியேற வாய்ப்பு உள்ளது. அதிக அளவில் வட்டி வாங்கியவர்கள் குறைந்த வட்டியை வாங்கி அதிக அளவு வட்டியை அடைப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது. உங்களது ராசியின் படி நாலாம் இடத்தில் சனி பகவான் உள்ளார். நாலாம் இடம் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு இடமாவும். ஆனால் இந்த இடத்தில் சனி பகவான் இருப்பதால் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்காமல் பல சங்கடங்களை கொடுத்திருந்திருப்பார். நிம்மதியாக இருக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள். குடும்பத்தில் ஒன்றும் மாற்றி ஒன்று அடுத்தடுத்து பொது பிரச்சனைகள் உருவாகிக்கொண்டே இருக்கிறது என்று மனம் வருத்தத்துடன் இருப்பீர்கள். இதுபோன்ற மனரீதியான பல பிரச்சினைகள் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு இருக்காது. 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வரக்கூடிய சனிப்பெயர்ச்சியில் உங்கள் ராசியில் நான்காம் இடத்தில் உள்ள சனி பகவான் ஐந்தாம் இடத்தில் வர உள்ளார். இந்த சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு உங்கள் தாயாருக்கு ஏற்பட்ட உடல் நல கோளாறுகள் அல்லது உடல் நலப் பிரச்சினைகள் அடியோடு அகலும். தாயுடன் உங்களுக்கு இருந்த ஏதேனும் கருத்து வேறுபாடு, அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையால் தாழ்மையுடன் பேசாமல் பிரிந்து இருப்பவர்கள் என்றால், அவர்கள் ஒன்றுசேர்வதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது. கடந்த ஆண்டு உங்களுக்கு பணம் வரவில் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும். புதிதாக வண்டி வாங்கி இருந்தாலும் அல்லது வேறு ஏதேனும் வாகனம் வாங்கி இருந்தாலும் அது ஏதேனும் பழுதுக்கு உள்ளாகியிருக்கும். இவை அனைத்தும் 2025 ஆம் ஆண்டு கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
வியாபாரம்: நீங்கள் கஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்து முடித்து இருப்பீர்கள். ஆனால் அதற்கான பெயர் வேறு ஒருவருக்கு போய் சேரும். இதை நினைத்து பலமுறை நீங்கள் ஆதங்கம் கொண்டிருப்பீர்கள். இதுபோன்ற ஒரு கசப்பான சூழ்நிலை மாறி உங்கள் உழைப்புக்கான வெற்றி மற்றும் உங்கள் உழைப்புக்கு தகுந்தவாறு வேலையில் உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தை பொருத்தவரை நன்றாக வியாபாரம் இருந்திருக்கும். ஆனால் சில நாட்கள் நல்ல வியாபாரம் பல நாட்கள் எந்த ஒரு வியாபாரமும் நடக்காமல் இருக்கிறது என்று வேதனைப்பட்டிருப்பீர்கள். இதுபோன்ற நிலைமை 2025 ஆம் ஆண்டு மாறி தினமும் நல்ல வியாபாரம் நல்ல வருமானம் அதிக லாபம் போன்றவை கிடைக்கும். வாடகை இடத்தில் கடை நடத்திக் கொண்டிருந்தால் இந்த 2025 ஆம் ஆண்டில் சொந்த இடத்தில் கடை நடத்துவதற்கான சூழ்நிலை உருவாகும்.
கவனம் தேவை: வருகின்ற மே மாதம் எட்டாம் வீட்டில் குரு பெயர்வதால், கவனமாக இருக்க வேண்டும். பணத்தை ஒருவரிடம் கொடுக்கும் பொழுதும் வாங்கும் பொழுதும் முழு கவனத்தையும் அதில் வைத்து வாங்கவோ கொடுக்கவோ செய்ய வேண்டும். பணவரவு நன்றாக அமையும். அந்த பணத்தை பேணி காப்பதும் சேமித்து வைப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். மே மாதம் வரக்கூடிய ராகு கேது பெயர்ச்சி, உங்கள் ராசியின் படி நான்காம் இடத்திற்கு வருகிறது. அதனால் சிறிதளவு உடற்பயிற்சியும் அல்லது நடைப்பயிற்சி யோகா போன்றவை செய்வது நல்ல பயன் தரும். பெரிதாக எந்த ஒரு பாதிப்பும் வராது. உங்கள் ராசியில் கேது பத்தாம் இடத்தில் வருவதால் புதுவிதமான விஷயங்கள் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும்.
தரிசனம்: 2025 ஆம் ஆண்டு பல நன்மைகளை தரக்கூடிய ஆண்டாகவும் உத்தியோகத்தில் பல வெற்றிகளை தரக்கூடிய ஆண்டாகவும் உங்களுக்கு அமைவதற்கு ஆஞ்சநேயரை வணங்குவது நல்லது.
தானம்: இந்த ஆண்டு நன்மை தரும் ஆண்டாக அமைவதற்கு உளுத்தம் பருப்பு தானமாக கொடுங்கள். மற்றும் ஏழை எளிய மாணவர்களின் படிப்பு செலவுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். ஏழை எளிய மாணவர்களுக்கு தேவைப்படும் பேனா பென்சில் நோட்டுப் புத்தகங்கள் போன்ற சிறு உதவி ஆக செய்து வாருங்கள். இது அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். மேலும் இந்த ஆண்டு நோய் நொடியின்றி நலமான ஆண்டாக அமைவதற்கு வாழ்த்துக்கள்.
மேலும் படிக்க கிளிக்
RASI PALAN TODAY | இன்றைய ராசி பலன் |
இன்றைய நல்ல நேரம் |
மாத ராசி பலன் |
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் |
பல்லி விழும் பலன்கள் |
கனவு பலன்கள் |