New Year Rasi Palan 2025 in Tamil Kadagam | கடகம் ராசி ஆங்கில புத்தாண்டு பலன்கள்

rasi palan today

By ASTRO SAKTHI

Published on:

kadagam rasi palan today கடகம் ராசி பலன் இன்று

New Year Rasi Palan 2025 in Tamil Kadagam | கடகம் ராசி ஆங்கில புத்தாண்டு பலன்கள்

உங்கள் வாழ்க்கையில்  வந்திருந்த பல தீராத பிரச்சனைகளை எளிய முறையில் தீர்க்கக் கூடிய வல்லமை வாய்ந்த உங்களால் கடந்த ஐந்து ஆண்டுகளாக சாதாரண சிக்கலை கூட சமாளிக்க முடியாமல் தத்தளித்திருப்பீர்கள். அந்த அளவு உங்கள் வாழ்க்கையை அஷ்டமத்து சனியும்  கண்டக சனியும்  புரட்டிப் போட்டிருந்திருக்கும். சுறுசுறுப்புக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் நீங்கள், பல விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பீர்கள். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் நேருக்கு நேர் நின்று எதிரிகளை சமாளிக்கக்கூடிய திறமை கொண்டவர்களாக இருப்பீர்கள். ஓய்வெடுக்க கூட நேரம் ஒதுக்காமல் சுறுசுறுப்பாக உழைக்க கூடியவர்கள் நீங்கள் தான். 

2025 ஆம் ஆண்டு உங்களுக்கு ஒரு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. அடுத்தவர்களின் பிரச்சனைக்கு முன் நின்று அவர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து உதவி செய்பவர்களாக இருப்பீர்கள். ஆனால் உங்களின் பிரச்சினையை உங்களால் சரி செய்ய  முடியவில்லை என்று வருந்தி கொண்டு இருந்திருப்பீர்கள். இந்த 2025 ஆம் ஆண்டு உங்களின் பிரச்சினையை நீங்கள் எளிய முறையில் தீர்க்கக் கூடிய ஒரு ஆண்டாக அமைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அஷ்டமத்து சனி உங்களது ராசியில் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். மார்ச் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு வெற்றி நிச்சயம் ஆக இருக்கும். நிம்மதி பெருமூச்சு விடும் தருணம் மார்ச் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு நெருங்கி வரும். 

வியாபாரம்: மார்ச் 29ஆம் தேதி அன்று  வரக்கூடிய சனி பெயர்ச்சியால் உங்களுக்கு பல நன்மைகள் உள்ளது. தற்பொழுது குரு பகவான் உங்கள் ராசியில் லாப ஸ்தானத்தில் உள்ளார். பணம் வரவு நன்றாக இருக்கும்.  அதே சமயம் மே 14ஆம் தேதி குரு பகவான் உங்கள் ராசியில் பன்னிரண்டாம் இடத்திற்கு செல்வதால் வேலை பார்க்கும் இடத்தில் பதவி உயர்வு, பணியிடமாற்றம், வேறு மாநிலம் அல்லது வேறு மாவட்டத்திற்கு சென்று வேலை பார்ப்பது, வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய அமைப்பு காணப்படுகிறது. புதிய வங்கி கடன்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. வாங்கிய கடனை அடைப்பதற்காக சாதகமும் காணப்படுகிறது. நீங்கள் பார்க்கும் உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் இனி உங்களுக்கு ஆதரவாக பேசுவதை நீங்கள் காணலாம். 

சுப செலவு: தற்பொழுது உங்கள் ராசியில் குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பதால் பணவரவு அதிக அளவு இருப்பது போல அதிக அளவு செலவும் இருக்கும். அதாவது சுப செலவு நிறைந்த ஆண்டாக இருக்க வாய்ப்புள்ளது. தற்பொழுது இருக்கும்  இடத்திலிருந்து வேறு இடத்திற்கு சென்று வீடு கட்டும் யோகம் அருமையாக உள்ளது. 

கவனம் தேவை: மே மாதம் 18ம் தேதி நடக்கக்கூடிய ராகு கேது  பெயர்ச்சியால், உங்கள் ராசிக்கு கேது இரண்டாம் வீட்டிற்கு வருகிறார். ராகு எட்டாம் வீட்டிற்கு செல்கிறார். தேவையில்லாத பழக்கவழக்கங்கள் இல்லாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களை தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு தேவைகள் நிறைவேறிய பிறகு உங்களை காலைவாரி விடும் சில நட்பு வட்டாரங்கள் உருவாகக் கூடும். உங்களிடம் உதவிக்காக மட்டுமே சிரித்துப் பேசி நடிக்கும் நபர்களையும் அல்லது நண்பர்களையும் உங்களுடன் சேர்த்துக் கொள்ளாமல் கொஞ்சம் தள்ளி நின்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

திருமணம்: உங்கள்  பிள்ளைகளால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படக்கூடும். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். மகளுக்கும் நல்ல இடத்தில் வரன் அமைவதற்கு வாய்ப்புகள் காணப்படுகிறது. 

தரிசனம்: 2025 ஆம் ஆண்டு அனைத்து விதத்திலும் வெற்றி பெறுவதற்கான ஆண்டாக உங்களுக்கு அமைந்துள்ளது.  மேலும் நீங்கள் வெற்றி பெறுவதற்கு சிவபெருமானை தொடர்ந்து வழிபட்டு வர வேண்டும்.பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபட்டு வருதல் அல்லது சோமவார திங்கள் கிழமையில் சிவபெருமானை  வழிபட்டு வந்தால் நிச்சயம்  வெற்றி கிடைக்கும்.

தானம்: தானம் கொடுப்பதன் மூலம் பல நன்மைகளை உங்கள் வாழ்வில் நீங்கள் பெறலாம். மலை வாழைப்பழத்தை தானமாக கொடுங்கள்.மேலும் கண்பார்வை அற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து வாருங்கள். 2025 ஆம் ஆண்டு கடனில்லா வாழ்வில் வெற்றி பெறுவதற்கான ஒரு ஆண்டாக உங்களுக்கு அமைவதற்கு வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க கிளிக்

RASI PALAN TODAY | இன்றைய ராசி பலன்
இன்றைய நல்ல நேரம்
மாத ராசி பலன்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
பல்லி விழும் பலன்கள்
கனவு பலன்கள்
rasi palan today

ASTRO SAKTHI

error: Content is protected !!