New Year Rasi Palan 2025 in Tamil Dhanusu | தனுசு ராசி ஆங்கில புத்தாண்டு பலன்கள்

rasi palan today

By ASTRO SAKTHI

Published on:

dhanusu rasi palan today தனுசு ராசி பலன் இன்று

New Year Rasi Palan 2025 in Tamil Dhanusu | தனுசு ராசி ஆங்கில புத்தாண்டு பலன்கள்

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா என்ற  பாடல் வரியை மறவாமல் இருப்பது நீங்கள் தான். வெளிமாநிலங்களுக்கும் அல்லது வெளி நாடுகளுக்கு சென்று எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் எவ்வளவு சுதந்திரமாக இருப்பதாக நினைத்தாலும் அவ்வப்போது உங்கள் சொந்த ஊரை நீங்கள் நினைத்துக் கொண்டே இருப்பீர்கள். எங்கள் ஊர் போல் வேறு ஊரில் இல்லை என்று கூறிக் கொண்டே இருப்பீர்கள். பிறந்த ஊரையும் பிறந்த மண்ணையும் பெற்றெடுத்த தாயையும் மறக்காமல் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் நீங்கள் தான். 

கடந்த 2024 ஆம் ஆண்டு பல உடல் ரீதியாகவும் மனத ரீதியாகவும் கஷ்டங்களை அனுபவித்திருப்பீர்கள். நெருங்கிய நண்பர்கள் எல்லாம் விலகிப் போவதும் பேசிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் பேசாமல் விலகி இருப்பது கணவன் மனைவிக்குள் தேவையில்லாத சண்டை சச்சரவு போன்றவை ஏற்பட்டிருந்திருக்கும். இவை அனைத்தையும் தலைகீழாக மாற்றுவதற்கு இந்த 2025 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு உங்கள் ராசியில் இருந்து தான்  பிறந்திருக்கிறது. உங்கள் ராசியில் சந்திர பகவான் இருக்கும் பொழுது புது ஆண்டு பிறந்துள்ளது. ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் காட்ட வேண்டும். அனைத்து பிரச்சனைகளையும் இழுத்து வைத்து மூட்டையாக கட்டிக்கொண்டு தெரிய வேண்டாம். பிரச்சினைகளை ஒவ்வொன்றாக சமாளித்து வாருங்கள் வெற்றி நிச்சயம் உங்கள் பக்கம். 

சுப செலவு: 2025 ஆம் ஆண்டு பிறக்கும் பொழுது, உங்கள் ராசியில் மூன்றாம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். இதுவரை நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த  பணத்தை வைத்து ஏதேனும் வீடு வண்டி வாகனம் அல்லது வெளியூரில் மனை போன்றவை வாங்கி வைப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளது. வெளியூரில் மனை வாங்கி போட்டால் பிறகு குழந்தைகளுக்கு பயன்படும் என்பதற்காக மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். ஆனால் எங்கள் வாழ்வும் கடன் ஏதேனும் ஒரு சுப செலவுக்கான கடனாக இருக்கும். வீடு கட்டுவதற்கோ அல்லது வீடு வாங்குவதற்கு வாகனம் வாங்குவதற்கு போன்ற சுப செலவாகவே அமையும். உங்கள் ராசிநாதரான குருபகவான் தற்பொழுது  உங்கள் ராசியின் ஆறாம் வீட்டில்  இருக்கிறார். சகட குருவாக இருந்ததால் பல சங்கடங்களை நீங்கள்  சந்தித்திருக்க நேரிட்டிருக்கும். மே மாதம் நடக்கக்கூடிய குரு பெயர்ச்சி சகல குருவாக உள்ள குரு, உங்கள் ராசியில் ஏழாமிடத்தில் வந்து அமர போகிறார். அதனால் மே மாதத்திற்கு பிறகு பல நல்லது உங்களுக்கு நடக்கும்.  உங்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் விலகும். நீங்கள் எதிர்பார்த்த பல விஷயங்கள் விரைவில் கைக்கூடல். இத்தனை நாள் நீங்கள் தேடிச்சென்று உங்களிடம் பேசாமல் உங்களை அவமதித்தவர்கள் தற்பொழுது உங்களை தேடி வந்து பேசுவார்கள். நீங்களே விலகி சென்றாலும் கூட உங்களிடம் வழிய வந்து பேசுவார்கள். 

மே மாதத்திற்கு பிறகு உங்கள் ராசியை குரு பகவான் பார்ப்பதால் உங்கள் முகத்தில் ஒரு பிரகாசம் அதிகரிக்கும், அழகு கூடும், சோம்பல் குறைந்து சுறுசுறுப்பு கூடி அனைத்து வேலைகளையும் நீங்களே எடுத்துப் போட்டு செய்யும் அளவிற்கு மாறுவீர்கள். 

கவனம் தேவை: மார்ச் மாதம் நடக்கக்கூடிய  சனிப்பெயர்ச்சியில் சனிபகவான் உங்கள் ராசியில் நான்காம் இடத்திற்கு வரப்போகிறார். இதனால் வண்டி வாகனங்களில் செல்லும்போது அதிக அளவில் கவனம் தேவை. இரவு நேரத்தில் பயணம் செய்வதை முடிந்தவரை குறைத்துக் கொள்ளுங்கள் அல்லது தவிர்த்துக் கொள்ளுங்கள். நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் போது  அதிக அளவு கவனம் கொள்ள வேண்டும். ஒரு வருடம் பணம் கொடுத்தல் வாங்கல் ஏற்படும்போது ஒரு சிறு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விளம்பரங்களை பார்த்து அங்கீகாரம் இல்லாத வங்கிகளில் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம்.  பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை யோசித்து பலரிடம் ஆலோசனை கேட்டு பின்னர் முதலீடு செய்யவும். 

மே மாதம் நடக்கக்கூடிய ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு முழு சாதகமாக அமைய உள்ளது. நான்காம் இடத்தில் உள்ள ராகு மூன்றாம் இடத்தில் வருவதால் சொத்துபத்து அதிக அளவில் சேரும். பணவரவு அதிக அளவில் இருக்கும். உங்கள் ராசியில்  ஒன்பதாவது  இடத்தில் கேது வருவதால் அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அப்பாவிற்கு மருந்து செலவு செய்ய நேரிடும். உத்தியோகத்தில் வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

தரிசனம்: 2025 ஆம் ஆண்டு மேலும் பல நன்மைகளை நீங்கள் பெறுவதற்கு ஸ்ரீ துர்க்கை அம்மனை வழிபட்டு வாருங்கள். 

தானம்: உலர் திராட்சை தானமாக கொடுத்து வருவது மிக நல்லது. சொந்தம் பந்தம் இருந்தும் இல்லாமல் இருக்கும் ஆதரவற்ற முதியவர்களுக்கு உங்களால் இயன்ற சிறு உதவிகள் செய்து வருவது உங்கள் வெற்றிக்கு  வழி வகுக்கும். 2025 ஆம் ஆண்டு அனைத்து விஷயங்களிலும் வெற்றி, பல மடங்கு மகிழ்ச்சி, உத்தியோகத்தில் உயர்வு, பணவரவு போன்றவை கிடைப்பதற்கு வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க கிளிக்

RASI PALAN TODAY | இன்றைய ராசி பலன்
இன்றைய நல்ல நேரம்
மாத ராசி பலன்
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
பல்லி விழும் பலன்கள்
கனவு பலன்கள்
rasi palan today

ASTRO SAKTHI

error: Content is protected !!