கனவு பலன்கள் – தீ கனவில் வந்தால் என்ன பலன் ?
தீ கனவில் வந்தால் என்ன பலன் ?
நம்மில் பலருக்கு இந்த கனவு அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். பெரும்பாலாக கனவுகள் இன்றி நாம் தூங்குவது ஒரு ஆழ்ந்த தூக்கமாக கருதப்படுகிறது. ஆனால் எல்லோரும் ஒரு ஆழ்ந்த தூக்கத்தை தினசரி பெறுவது இல்லை காரணம் கனவுகள் தான். பகல் முழுக்க நம் மனதில் ஓடும் நினைவுகளும் நம் வாழ்க்கையில் நடக்கும் நினைவோடும் சேர்ந்து ஒரு கட்டுப்படுத்தப்படாத உணர்ச்சியாக வெளிப்படுகிறது. நமது தூக்கத்தில் வரும் இந்த நிகழ்வே கனவாகும்.
ஜாதக ரீதியாக கனவுகள் என்பது வருங்காலத்தைக் குறிக்கும் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. அது ஓரளவிற்கு உண்மையும் கூட… நாம் காணும் கனவுகள் அனைத்தும் பலிக்குமா என்றால் நிச்சயம் இல்லை.. ஆனால் ஒரு சிலருக்கு அவர்கள் கண்ட கனவில் வந்த நிகழ்வுகள் பலிக்கவும் செய்கின்றன.
இது எல்லாம் ஏன் நடக்கிறது ? எதற்காக நடக்கிறது ? என்று 100% அறிவியல் ஆய்வுகள் கூட கிடையாது. இருந்தாலும் கனவுகளை வெவ்வேறு வழிகளில் பலர் அணுகுகிறார்கள். அந்த வகையில் ஜாதக ரீதியாகவும் நம் தமிழர் பண்பாட்டு அறிவியல் ரீதியாகவும் கனவுகளுக்கென்று சில விளக்கங்கள் உள்ளது. அவற்றில் உங்கள் கனவுகளில் நெருப்பு பற்றி எரிவது போலவும் அல்லது தீப்பிடித்து எரிவது போலவும், நீங்கள் நெருப்பில் மாட்டிக்கொள்வது போலவும், தீயை அணைக்க முயல்வது போலவும், தீயின் வெவ்வேறு வடிவங்களை நீங்கள் கனவில் கண்டால் அதற்கான பலன்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்..
நெருப்பு கனவில் வந்தால் என்ன பலன் ?
பொதுவாக, நெருப்பை நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் உங்களுக்கு நல்ல வருமானம், செல்வம் மற்றும் வளங்கள் எல்லாம் வந்து சேரும் என்று அர்த்தமாகும்.
உங்களை சுற்றி நெருப்பு எரிந்தால் என்ன பலன் ?
நீங்கள் உங்களைச் சுற்றி ஒரு நெருப்பு வளையத்தை உணர்ந்தாலோ அல்லது பற்றி எரியும் நெருப்பிற்கு உள்ளே நீங்கள் மாட்டிக் கொள்வது போல உங்களுக்கு கனவு வந்தாலோ.. உங்களுடைய உடலானது பலம் அடைய போகிறது. அது மட்டுமல்லாமல் உடலில் இருந்த நோயெல்லாம் தீரப் போகிறது என்று அர்த்தமாகும்.
நெருப்பு பற்ற வைப்பது போல கனவு கண்டால் என்ன பலன் ?
நீங்கள் உங்களுடைய கனவில் ஏதோ ஒரு பொருளையோ அல்லது இடத்திலேயோ நெருப்பை பற்ற வைப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு முன் கோபம் ஆனது அதிகமாக வரும் என்றும் அதனால் உங்கள் வாழ்க்கையில் சில முக்கியமான விஷயங்களை இழக்க போகிறீர்கள் என்றும் அர்த்தமாகும்.
தீயை மிதிப்பது போல கனவு வந்தால் என்ன பலன் ?
உங்களுக்கு முன்னால் பற்றி எரியும் நெருப்பில் நீங்கள் உங்களுடைய கைகளையோ கால்களையோ வைத்தாலோ அல்லது அந்த நெருப்பினை மிதித்தாலோ உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் பாதிப்பு வரப்போகிறது அல்லது நோய்வாய்ப்பட போகிறீர்கள் அல்லது ஏதேனும் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளப் போகிறீர்கள் என்று அர்த்தமாகும்.
தீபம் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன் ?
எப்பொழுதுமே உங்களுடைய கனவில் விளக்கு எரிவது போல கனவு வந்தால் ஏதோ ஒரு நல்லது உங்கள் வீட்டில் நடக்கப் போகிறது என்று அர்த்தமாகும். உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கப் போகிறது என்றும் அர்த்தமாகும்.
தீபம் அணைவது போல் கனவு கண்டால் என்ன பலன் ?
உண்மையில் இந்த கனவிற்கான அர்த்தம் நம் அனைவருக்கும் தெரிந்ததாக இருக்கும். எப்பொழுதும் ஒரு தீபமானது அணைவது என்பது ஏதோ ஒரு கெட்ட சகுனத்தையே குறிக்கிறது. அதேபோல் உங்களுடைய கனவில் தீபமானது அணைவதுபோல வந்தால் அதற்கு உங்களுடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு துன்பமான நிகழ்வு நடக்கப் போகிறது என்றும் அல்லது உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் தடுமாற்றம் நிகழப்போகின்றது என்றே அர்த்தமாகும்.
உடல் பற்றி எரிவதை போல் கனவு கண்டால் பலன் என்ன ?
உங்களுடைய கனவில் உங்கள் உடலோ அல்லது வேறு யாராவது உடலிலோ நெருப்பு பற்றி எரிவது போல கனவு வந்தால் உங்களுக்கு நெருக்கமானவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும் அல்லது அவர்களுக்கு துன்பமானது ஏற்படும் என்று அர்த்தமாகும்.
கன்னிப்பெண் பற்றி எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன் ?
உங்களுடைய கனவில் ஒரு கன்னிப்பெண் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிவதுபோல உங்களுக்கு கனவு வந்தால், உங்களுக்கு ஏதேனும் ஒரு நல்ல செய்தி உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு அல்லது உங்களுடைய தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
வேட்டியில் தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன் ?
உங்களுடைய வேட்டியில் நெருப்பு பற்றி எரிவது போல உங்களுக்கு கனவு வந்தால் நீங்கள் மிகவும் கவனம் இல்லாமலும் முன்னெச்சரிககையாக யோசிக்க முடியாதவர் ஆகவும் இருப்பீர்கள். எனவே அதனால் உங்களுக்கு நிறைய தொந்தரவுகள் ஏற்படும். அதோடு உங்களுடைய அலட்சியத்தால் உங்களுடைய மனைவி அல்லது நெருங்கிய பெண் சொந்தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்று அர்த்தமாகும்.
உங்களுடைய கனவில் அடிக்கடி நெருப்பை கண்டால் என்ன பலன் ?
மேலே குறிப்பிட்டது போல உங்களுடைய கனவில் அடிக்கடி தீ பற்றி எரிவது போல உங்களுக்கு கனவு வந்தால், நீங்கள் ஏதோ ஒரு தீராத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் அல்லது பாதிக்கப்பட போகிறீர்கள் என்று அர்த்தமாகும்.
வீடு பற்றி எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன் ?
பொதுவாக ஒரு வீடு பற்றி எரிவதுபோல அல்லது தீப்பிடித்து எரிவதுபோல கனவு கண்டால் அந்த வீட்டின் உரிமையாளர் அல்லது சொந்தக்காரருக்கு ஏதேனும் உடல் நலக்குறைவு அல்லது உடல் உபாதைகள் அல்லது தொழிலில் ஏதேனும் பின்னடைவுகள் ஏற்படும்.
வீடு முழுவதுமாக எரிந்து சாம்பலாக போனால் நிச்சயமாக தீராத நோய் அல்லது துன்பத்தால் பாதிக்கப்பட போகிறீர்கள் என்று அர்த்தமாகும்.
வீடு பற்றி எரியும்போது நீங்கள் அதை அணைக்க முற்பட்டு..அதை அணைத்தும்விட்டால் கஷ்டப்பட்டு ஏதோ ஒரு காரியத்தில் நீங்கள் வெற்றி மாலை சூடிக் கொள்ள போகிறீர்கள் என்று அர்த்தமாகும்.
பொதுவாக நெருப்பை கனவில் கண்டால் என்ன பலன் ?
பொதுவாகவே ஒரு நபர் அடிக்கடி தங்களுடைய கனவில் நெருப்பையோ அல்லது தீபத்தையோ அல்லது விளக்கு எரிவது போலவோ கனவு கண்டால் அவர்கள் தங்களுடைய குலதெய்வத்தை வழிபடுவது இல்லை என்றும் கோவிலுக்கு செல்வதில்லை என்றும் அர்த்தமாகும். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய குலதெய்வத்தையோ அல்லது அருகில் உள்ள கோவிலுக்கும் சென்று வந்தால் இத்தகைய நெருப்பு பற்றிய கனவுகள் அவர்களுக்கு வருவது குறைய வாய்ப்பு இருக்கிறது.
தீ என்பது பஞ்சபூதங்களில் ஒன்றாகும். ஒருவருக்கு நெருப்பை பற்றிய கனவு வந்தால் அவர்கள் நிச்சயம் இறைவனுடைய ஆசிர்வாதத்தை பெற்றவர்களாகவே கருதப்படுகின்றனர். ஏனென்றால் நெருப்பை ஒருவர் கனவில் கண்டால் அவர்களுக்கு இறைவனே ஏதோ சொல்ல நினைக்கிறார் என்பதே பொருளாகும். இப்படி நெருப்பை கனவு காண்பவர்கள் தங்களுக்கு இறைவனுடைய ஆசிர்வாதம் இருக்கிறது என்று மகிழ்ச்சி கொள்ளலாம் ஒரு வழியில்….
இதையும் படிக்கலாமே,