ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 : மேஷம்
இதுவரை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் இருந்து வந்த ராகு, இனி லாப ஸ்தானமாகிய கும்ப ராசிக்கு மாறுவது மிகவும் அனுகூலமான மாறுதலாகும்! ஏற்கனவே நான் கூறியுள்ளபடி, “கொடுப்பதில் ராகுவிற்கு இணை அவரே…!”
வரும் சுமார் ஒன்றரை வருடக் காலத்தில், நிதி நிலைமையில் மிக நல்ல மாற்றம் ஏற்படுவதைக் கண்கூடாகக் காணலாம். வருமானம், தற்போது நடைபெறும் தசா, புக்திகளுக்கு ஏற்ப உயரும். இதுவரை விரய ஸ்தானத்தில் ராகு அமர்ந்திருந்ததால், தொடர்ந்து ஏற்பட்டுவந்த வீண் செலவுகள் குறையும்.
ஒரு சிலருக்கு, எதிர்பாராத பண வரவிற்கும் சாத்தியக்கூறு உள்ளதை, ராகுவின் நிலை எடுத்துக் காட்டுகிறது. சென்ற பல வருடங்களாக, மனத்தை அரித்து வந்த கடன்களை அடைத்து, நிம்மதி பெற வழிபிறக்கும். பணப் பற்றாக்குறையினால், தாமதமாகியிருந்த பெண்ணின் திருமணம் நடைபெற வழிவகுத்தருள்வார், ராகு!
இதுவரையில், உங்கள் ராசிக்கு, ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில், சஞ்சரித்துவந்த கேது, இனி, பூர்வ புண்ணிய – புத்திர ஸ்தானமாகிய சிம்ம ராசிக்கு மாறுவது, ஓரளவுநன்மைகளை அளிக்கும்.
குழந்தைகளின் கல்வி சம்பந்தமாக, பணம் செலவழியும். தீர்த்த, தல யாத்திரை சித்திக்கும். மகான்கள், பெரியோர்களின் ஆசியும் கிட்டும். ஒரு சிலருக்கு, பூர்வீகச் சொத்து ஒன்று கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.
பரிகாரம் :
செவ்வாய்க்கிழமைகளில் அருகில் உள்ள திருக்கோயில் ஒன்றில் மாலையில் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து வருவது மிக சிறந்த பரிகாரமாகும்.